பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத் திரயம் 36th மிச்ரதத்துவம் : இதுவே மூலப்பிரகிருதி என்பது. இது சாத்துவிகம். இராஜசம், தாமசம் என்று மூன்று குணங்களை யுடையதாதலின் திரிகுணம் என்ற பெயராலும் வழங்கும். இந்த முக்குணங்கள் சமமான நிலையில் உள்ளபோது பிரகிருதியின் விகாரங்கள் நாம ரூபபேத விசேடம் இல்லாமல் பிரமாணங்களால் காணக்கூடாதபடி அதிகுக்குமங்களாக இருக்கும் (இதுவே மகாப்பிரளய நிலை). இந்தக் குணங்கள் ஏற்றத்தாழ்வை அடையுங்கால் இந்தப் பிரகிருதி பலவித தத்துவங்களாக மாறி நாம ருபபேத விசேடத்தையுடையன வாகும். இவை பிரமாணங்களால் காணக்கூடியவை. அசித்தின் மூன்று குணங்களும் சேர்ந்து கர்மவான்களான சம்சாரி, சேதநருடைய ஞானம் ஆனந்தம் இவற்றிற்கு மறைவை உண்டாக்கும். அதுவல்லாததனை அதுவாக நினைக்கும் விபரீத ஞானத்தையும் உண்டாக்கும். இன்னும் இம்மிச்ரதத்துவம் ஆதல் அழிதல் இல்லாதது. இஃது ஈசுவரனுடைய - உலகப்படைப்பு முதலியவற்றிற்கு விளையாட்டுக் கருவியாக இருந்து ஏற்றத்தாழ்வுள்ள فاسا يلي என்ற இடவேறுபாட்டாலும்: அழிவுக்காலம், படைப்புக் காலம் என்ற கால வேறுபாட்டாலும் சூக்கும விகாரங்களை யும் தூலவிகாரங்களையும் உண்டாக்கக் கடவது. இது விசித்திரமான படைப்பை உண்டாக்குவதால் மாயை' என்ற பெயரையும் பெற்றது. - இந்தமிச்ர தத்துவம் இருபத்தி நான்கு வடிவங்களாக இருக்கும். இவற்றை ஆழ்வார். - பொங்கு ஐம்புலனும் பொறிஐந்து - இந்ந்ேத்ரீம்ே ஐம்த்தி ம் இங்கு இவ்வுஇரேய் பிரகிருதி .ன் ஆங்காரம் மனங்களே (10.7 : 10) என்று குறிப்பிடுவர். அதாவது சேதநரைப் பூரிக்கும்படி செய்யும் சுவை ஒளி ஊறு இசை நாற்றம் ஆகிய புலன்கள் ஐந்தும், மெய் வாய் கண் செவி முக்கு ஆகிய பொறிகள்