பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சடகோபன் செந்தமிழ் சீரார் சுடர்கள் இரண்டுஆய் சிவனாய் அயன்ஆனாய் (6.9 : ; ) என்ற இன்னொரு திருவாய்மொழியிலும் வந்துள்ளது. ஈசுவரன் : சீமர் நாராயணனே சர்வேசுவரன். இவன் சத்தியம், ஞானம், ஆனந்தம் அனந்தம், அமலம் இவற்றின் சொரூபமாக இருப்பவன். இடத்தாலும் காலத்தாலும் அளவிடப் பெறாதவன். அந்தமில் ஆதிபகவன் (1.3. 5) என்பர் நம்மாழ்வார். எங்கும் நிறைந்திருப்பவன். இதனை, கரவிசும்பு எரிவளி நீர்கிலம் : இவைமிசை வரன்நவில் திறல்வலி அளியொறை ஆய்கின்ற பரன் ( , 11) என்று காட்டுவர் ஆழ்வார். மேலும், உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ (1.1 7) என்று விளக்குவர். மூன்றுவித சேதந அசேதந பரிணாம உருவமான வேறுபாட் டின் குறைகள் (விகார தோஷங்கள்) தட்டாதவன். அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு வகைப்பட்ட பலன் களையும் உயிர்கட்குத் தந்து அவற்றின் புகலிடமாக இருப்பவன்; தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். தனிமாப் புகழே எஞ்ஞான்றும் கிற்கும் படியாய்த் தான்தோன்றி முனிமாப் பிரம முதல்வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனிமாத் தெய்வம் (8.10 :7) 4. சத்தியம்-எப்பொழுதும் மாறுபடாத தன்மை; ஞானம்-எப்பொழுதும் குறைவுபடாத - ஞானம்; அனந்தம் -தேசம், காலம், பொருள் இவற்றால் அளவிட முடியாதபடி எவ்விடத்திலும் எக்காலத் திலும் எந்தப் பொருள் வடிவமாகவும் நிற்கும் தன்மை. ஆனந்தம் : ஆனந்த சொரூபனாய் நிற்றல் அமலம்-குற்றங்கள் இல்லாமை.