பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சடகோபன் செந்தமிழ் திவ்வியதேசம். இந்த ஊரில் வழிவழியாகத் திருமாலடிக்கே தொண்டுபூண்டொழுகும் குடியில் பிறந்த காரியார் என்ற வைணவப் பெருஞ்செல்வர் ஒருவர். இவர் வேளாளர் குலத்தில் வந்தவர் என்பது மக்களிடையே வழங்கி வரும் செய்தி. இவர் நாகர் கோயிலுக்கு அருகிலுள்ள திருவண் பரிசாரம் என்னும் திவ்விய தேசத்திலுள்ள திருவாழ்மார்பர் என்பவரின் அருமைத் திருமகளார் உடைய கங்கையார் என்பவரைத் திருமணம் புரிந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்தார். இங்ங்ணம் பல ஆண்டுகள் திருக்குருகூரில் வாழ்ந்துவரும் நாளில் இவருக்கு மக்கட்பேறு வாய்க்க வில்லை. ஒருநாள் மாமனார் திரு வாழ்மார்பர் வேண்டுகோளின் படி காரியார் தமது வாழ்க்கைத் துணைவி உடைய தங்கையாருடன் திருவண் பரிசாரம் வந்து சில காலம் தங்கி யுள்ளார். பின்னர் தம் தேவிகளுடன் தம்மூருக்குத் திரும்புகையில் திருக்குறுங்குடி" என்னும் திவ்விய தேசத் திற்கு வருகின்றனர். அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பி என்னும் திருநாமமுடைய எம்பெருமானை வந்தித்துப் 2. இவர் நாடார் மரபில் வந்தவராகக் காட்டுவார் என் அருமை நண்பர் ஆ. இராசகோபால் நாடார் ‘நம்மாழ்வாரும் நாமும்’ என்ற தமது நூலில், 3. திருவண்பரிசாரத்தில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானின் திருந்ாமமும் திருவாழ்மார்டர் என்பதே. இதன் வடமொழிப் பெயர்தான் சிரீநிவாசன் என்பது, 4. திருக்குறுங்குடி: நான்குநேரிக்கு (வானமாமலைக்கு) மேற்கிலுள்ளது; மலையையொட்டிய பகுதி. திருக் கோயிலில் ஐந்து நம்பிகளும் மலைமேல் ஒரு நம்பி பும் உள்ளன்ர். இந்தத் திவ்விய தேசம்பற்றிய செய்திகளைப் பாண்டி நாட்டுத் திருப்பதிக்ள் என்ற நூலில் 18-வது கட்டுரையில் கண்டு தெளிக.