பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 சடகோபன் செ ந்தமிழ் என்று;போற்றியுரைப்பர், அழிப்போடு அளிப்பவன் தானே' (1.9.8) என்றும், காக்கும் இயல்பினன் கண்ணபிரான் (2.29) என்றும் மேலும் கூறுவர். சிறார் வீடுகட்டி அழிக்குமாப்போலே இம்முத்தொழில்களும் இவனுக்குத் தன் இச்சையால் உண்டாகும் விளையாட்டாகும். மேலும்’ அசித்து மாறுபாடடைவதற்கும், உயிர்கள் தத்தம் வினைக் கேற்ப உடல்களை அடைவதற்கும் இவனே காரணன். கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் (3.5:10) என்பர் ஆழ்வார். இந்த உலகிலுள்ள உயிர்களின் பக்தி, மூலமும் பிரபத்திமூலமும் வீடு பேற்றினை அடைவதற்கு இவனே துணையாவான். r சார்ந்த இருவல் வினைகளும் சரித்து, மாயப் பற்றறுத்து, தீர்ந்து, தன்பால் மனம்வைக்கத் திருத்தி, வீடு திருத்துவான் (1.5:10) என்று விளக்குவார் ஆழ்வார். - - நித்திய விபூதியாகிய பரமபதத்தில் அவனுக்கென்று தனியான திவ்விய மங்கள விக்கிரகம் உண்டு. அவ்வுருவம் ஈடும் எடுப்பும் அற்ற பேரொளியினை உடையது; பேரழகும் வாய்ந்து கண்டாரை ஈர்ப்பது, பயிலும் சுடர் ஒளி மூர்த்தி 7. ஆகாமியம் - இப்பிறப்பில் செய்யப்பெறும் வினை : வருவினையின் தொகுதி, இஃது எதிர்வினை, வருவினை என்ற பெயராலும் வழங்கப் பெறும், பிராரத்தம்-இப்பிறப்பிற்கு முன்னைய பிறப்பில் அநுபவித்தற் கென்று அளந்து கொள்ளப்பெற்ற வினைத் தொகுதி: இஃது ஊழ்வினை, நுகர்வினை என்ற பெயர்கள்ாலும் வழங்கப் பெறும், சஞ்சிதம்எஞ்சிய வினைத் தொகுதி, இஃது அபூர்வம், பழவினை, தொல்வினை கிடைவினை என்ற பெயர் களாலும் வழங்கும்.