பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திரயம் 375 கிளை வியூகங்கள் : மேலே குறிப்பிட்ட நான்கு வியூகங் களும் ஒவ்வொன்றும் மும்மூன்றாகப் பன்னிரண்டு கிளை வியூகங்களாகப் பிரியும். வாசுதேவனிடத்துக் கேசவன் நாராயணன், மாதவன் என்ற கிளைகளும்; சங்கர்ஷணனிடம் கோவிந்தன், விஷ்ணு,மதுசூதனன் என்பலைகளும் பிரத்தியும் நனிடமிருந்து திரிவிக்கிரமன், வ | ம ன ன் , சிரீதரன், வைகளும், அநிருத்தனிடமிருந்து இருடிகேசன், பதுமநாபன் தாமோதரன் என்பவைகளும் தோன்றி அவ்வப்பெயர் களைப் பெறும். இவை யாவும் பன்னிருதிங்களின் தலைவா களாக இருக்கும். இவற்றின் அறிகுறியாக வைணவர்கள் தம்உடலில் துவாதசமாகத் திருமண் காப்பிட்டுக் கொள்வர். 2. இதம் (ஹிதம்) வீடுபேற்றிற்குச் சாதனமாக அநுட்டிக்கப்பெறும் வழியே இதம் என்பது, வைணவ சமயத்தில் சித்தோயம், சாத்தியோபாயம் என்ற இருநெறிகள் பேசப் பெறுகின்றன. சித்தோபாயம் என்பது, நம்மால் செய்யப்பெற வேண்டிய தாயன்றி முன்பேயுள்ள நெறி; இது சர்வேசுவரன். மகள் பாசுரங்களில் சித்தோபாயம் சிறப்புற்று ஓங்கி நிற்பதைக் காணலாம். சாத்தியோபாயம் என்பது, நம்மால் மேற் கொள்ளப் பெறும் உபாயமாகும். இது பக்திநெறி என்றும் , பிரயத்திநெறி என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப் பெறும். பக்திநெறி : இது கர்மயோகம், ஞானயோகம், பக்தி யோகம் என்ற மூன்று நிலைகளில் பயிற்சி யடைய வேண்டிய நெறி என்று கூறுவர். பக்திநெறியில் பல படிகள் உண்டு. இவற்றை எட்டு அங்கங்களாக முறைப்படுத்தி வகுத்துக் காட்டுவர். தவிர. பக்தி நிலையையும் பரபக்தி, பரஞானம் 8. திருவாய். 2. (பன்னிருதிரு நாமப் பாட்டு), தே. பி, பன்னிரு நாமம் 280 - 291. காண்க.