பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. மந்திரங்கள் முத்தியை அடைய விரும்புகின்றவன் திருமந்திரம், ຮອ່ລຸມຟ໌, சரம சுலோகம் என்ற மூன்று மந்திரங்களையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆழ்வாருடைய திருவிருத் தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற பிரபந்தங்கள் நான்கும் இந்த மூன்று இரகசியங் களோடு சேர்ந்தனவாகச் சொல்லப் பெறும்". திருமந்திரம் : ஒம் ருமே காராயணாய என்பது திருமந்திரம். இது ஒம் நம: + நாராயணாய என்று மூன்று பதங்களாய், எட்டு எழுத்தாய்” இருக்கும். மூன்று பதமும் மூன்று பொருளைச் சொல்லும். அதாவது, பிரணவம். சேதநனுடைய சேஷத்துவத்தையும் (அடிமைத்தன்மையை யும்), நமஸ்ஸு ஈசுவர பாரதக்திரியத்தையும் (ஈசுவரனுக்கு வசப்பட்டிருத்தல்), நாராயணாய சேதநன் ஈசுவரனுக்குப் புரிய வேண்டிய கைங்கரியத்தையும்’ (தொண்டையும்) தெரிவிப்பனவாகும். முதற்பதமாகிய பிரணவம் அ-உ-ம என்றும் பிரியும்க இங்ங்ணம் பிரிந்திருக்கும் நிலையில் அகாரம் - பகவானையும் 1. ஆசா. ஹிரு. 208. அடுத்த சூத்திரத்தில், (சூத் - 209) இதன் விளக்கம் தரப் பெறுகின்றது. இந்த விளக்கம் தான் இதன் கீழ்த் தரப்பெறுகின்றது. 2. ஒம் என்னும் பதம் ஓர் எழுத்து: "நம என்னும் பதம் இரண்டு எழுத்து; நாராயணாய என்னும் பதம் ஐந்தெழுத்து.