பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 பிறப்பும் வளர்ப்பும் 3. படியாய்க் கிடந்து அடியேங்கட்கு மகப்பேறு அளித்தருள வேண்டும்' என்று வேண்டுகின்றனர். அந்த ஆதிமூர்த்தியும் 'நாமே வந்து அவதரிப்போம் என்று பேரருள் பொலிந்து அர்ச்சகர் முகமாய்ச் சொல்வியருள்கின்றார். பிறகு அத்திருக் கோயிவில் தீர்த்தம், திருமாலை, திருப்பரி வட்டம் முதலிய வற்றைப் பெற்று திருக்கூரை வந்தடைந்து இல்லறம் நடத்து கின்றனர். குறுங்குடி நம்பியின் திருவருளால் உடையநங்கை யாருக்குப் பேறு ஏற்படுகின்றது. நாளடைவில் பகவானது அம்சமும், கெளத்துவத்தினது அம்சமும், சேனை முதலியாரது அம்சமும் (விஸ்வக்சேனர்) கூடிய ஒரு திருக்குமாரர் வைகாசி விசாகத்தில் வைணவ சமயத்தை நிலைநிறுத்த திருவவதரிக் கின்றார். இது வரலாறு. (1) இங்ங்னம் சிலகாலம் பிள்ளைப் பேறின்றித் திருக்குறுங்குடி நம்பியை வேண்டி ஆழ்வாரைப் பெற்றெடுத்த வரலாற்றுக்கு அகச்சான்று ஒன்று உள்ளது. கொடுங்காற் சில்ையர், கிரைகோள், உழவர், கொலையில் வெய்ய கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து அருவினையேன் நெடுங்கா லமும்கண்ணன் நீன்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற தொடுங்கா லொசியும் இடையிள மான்சென்ற சூழ்கடமே. --திருவிருத், 37. (கொடுங்கால் சிலையர் - வளைந்த விற்கழுத்தை யுடையவர்கள் - நிரைகோள் - பசுக்கூட்டம்: கொலை - கொலைத் தொழில்: துடி - பறை; படும் - ஒலிக்கும்; கவ்வை - ஆரவாரம்; நெடுங்காலம்; - நீண்ட காலம்; பரவி வழிபட்டு; பெற்ற ஈன்ற; தொடுங்கால் ஒசியும். தொட்டால் ஒடியும் இளமான்-இளமகள்: சூழ்கடம் , 'பாலை நிலம்) .