பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38? சடகோபன் செந்தமிழ் திருமந்திரத்தில் "ஓம்" "நம : என்னும் முதல் இரண்டு பதங்களின் பொருள்களோடு சேர்ந்திருக்கும் என்பது தெளி வாயிற்று. திருவாசிரியத்தில் “தாமரை உந்தித் தணிப் பெருநாயக! (திருவாசிரியம் -1} என்று தொடங்கி ‘எம்பெருமாயன்' (டிெ-7) என்று அதை முடிப்பதால் திருமந்திரத்தில் 'நாராயண' பதத்தால் சொல்லப்படுகின்ற நித்திய விபூதி யாகின்ற பரமபதம், லீலாவிபூதியாகின்ற இவ்வுலகம் ஆகிய இருவகைப்பட்ட உலகங்களோடுகூடின, நம்மால் அடையப் படும் பரம்பொருளையும், தனிமாத் தெய்வத்து அடியார்க்கு இனிநாம் ஆளாகவே, இசையும் கொல் (டிெ-3) என்றும், 'ஊழிதோறு ஊழி ஒவாது வாழிய என்று, யாம் தொழ இசையுங்கொல்"(டிெ-4) என்றும் அந்த 'நாராயண'பதத்தில் நான்காம் வேற்றுமையின் பொருளான கைங்கரியமாகின்ற பயனையும் சொல்லுவதால் பரம்பொருள், பரம் பொருளுக்குச் செய்யப்படுகின்ற கைங்கரியம் என்ற இரண்டையும் சொல்லுகிற திருவாசிரியப் பகுதியாலும் உருபிடைச் சொல்லாலும் அவ்விரண்ஆழ் இதால்லுகின்臀 முன்ஜாழ்தமான நாராயணபதத்தோடு: சர்ந்திருக்கும்'ஜ என்ப்து தெளிவாகின்றதன்றோ? ஆக திருவிருத்தம், திருவாசிரியம் என்ற இரண்டு பிரபந்தங்களும் திருமந்திரத் தின் பொருளை நுவல்வனவாக இருக்கும் என்பது தெளியப் படும். - - - துல்வயம் : இந்த மந்திரம், - பூரீமந் நாராயண சரணெள சரணம் பிரபத்தியே! ரீமதே நாராயணாய நம :! என்பது இதில் முதல்வாக்கியத்தால் பெரிய பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரனுடைய இரண்டு திருவடிகளையும் உபாயமாகப் பற்றுகின்றேன் எ ன் னு ம் பொருளும், இரண்டாவது வாக்கியத்தால் பெரியபிராட்டியாரும்