பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மந்திரங்கள் w 385 மூன்று பத்துகளால் முதல் வாக்கியத்தின் பொருள் விளக்கப் பெறுகின்றது; மேல் மூன்று பத்துகளால் உபாயத்திற்குத் தகுதியான குணங்களும், ஆன்மாவிலும் ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்றபடியும் அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தமும் தெளிவிக்கப்பெறுகின்றன. பத்தாம் பத்தால் தாம் வேண்டினபடியே பெற்றமை சொல்வித் தலைக்கட்டப் பெறுகின்றது. இவற்றைத் தனித்தனியே நோக்குவோம். முதல்பத்து : உயர்வற உயர்நலமுடையவன் அயர்வறும் அமரர்கள் அதிபதியவனவன் - துயரறு சுடரடி தொழுத்ெதிே என்மனனே (1.1:1) என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாய் வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து கூறிய பொருளுக்கும் இனி, கூறப்புகும் பொருளுக்கும் பிரமாணம் உளன் சுடர் மிகு சுருதியுள் (1.1 : 1) என்றதனால் குற்றங்களற்ற சுருதியே பிரமாணம் என்றும், இத்தன்மைகளையுடையவர் யார் என்ன, வண்புகழ் நாரணன் (1.2:10) என்றும் *திருவுடையடிகள் (1.3:8)என்றும், செல்வதாரணன் (1.19:8) என்றும் சிறப்புற ஓதி, தொழுது எழு என் மனனே' (i.1:1) என்று தொடங்கி அயர்ப்பிலன் அவற்றுவன். தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே (1,3:10) என்றதனால் முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம் என்று அறுதியிடுகின்றார். அதாவது தொழுது எழு’ (1.1:1) என்று தொடங்கி சொல் பணி செய் ஆயிரம் (1.10:11) என்று இப்பத்தினை முடிப்பதாலே பகவானுக்குச் செய்யும் கைங் கரியமே புருஷார்த்தம் என்று அறுதியிட்டார் என்பது தெளிவாகின்றது. - * 25 نسيج .