பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 2} ஆறோ(டு) ஈரெட்டு தொண்டை யவ்வடக .ாறிரண்டு கூறுதிரு நாடொன்றாக் Gត្.* என்று திருப்பதிகளை வகைப்படுத்திக் காட்டுவார் திவ்விய க.வி. இதன்படி, சோழநாடு 40 பாண்டிநாடு 18 மலைநாடு 13 தொண்டைநாடு 22 நடுநாடு 2 வடநாடு 12 திருநாடு 1 -ஆக 108 திருப்பதிகள். இந்த 108திருப்பதி எம்பெருமான்களும் திருப்புளி ஆழ்வாரின் கீழ் எழுந்தருளி இருந்த நம்மாழ்வாருக்குச் சேவை சாதித்த தாக வரலாறு. சடகோபர்மங்களாசாசனம் செய்த (தம் பாசுரங்களில் எடுத்துக் காட்டிய) திருப்பதிகள் முப்பத்தாலு என்று தெரி கின்றது. இவற்றுள் தனிப்பதிகங்களால் கூறப்பெற்றவை சில’. சிலதிருப்பதிகள் பாசுரங்களின் இடைஇடையே எடுத்துக் கூறப் பெற்றவை. ஆழ்வார் பாண்டிய நாட்டில் அவதரித்தவராதலால் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளையும் மலைநாட்டுத் (கேரளம்) திருப்பதிகளையுமே மிகுதியாக மங்களாசாசனம் செய்துள்ளார். சோழ நாட்டுத் திருப்பதிகங் கள் நாற்பதில் ஐந்தும், பாண்டி நாட்டு மலைநாட்டுத் திருப்பதிகங்களில் இருபத்து ஐந்து திருப்பதிகளும் இவர் 2. நூற். திருப். அந், 6 3. இங்ஙனம் கூறப்பெற்ற சைவத் திருப்பதிகளை பாடல் பெற்ற தலங்கள் என்று வகைப்படுத்துவர் சைவப் பெருமக்கள். - 4. இத்தகைய சிவத்தலங்களை வைப்புத் தலங்கள்’ என்று வேறுபடுத்திக் காட்டுவர் அப்பெருமக்கள்,