பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சடகோபன். செந்தமிழ் படுகின்ற என்னுடைய ஆவியே என்கின்றாள்' என்று நஞ்சியர் நிறுத்தினபடி பட்டர் அந்த இன்சுவையையறிந்து திருவுள்ள முடைந்து குலைப்பட்டார் என்றதாயிற்று. "இவர்க்குப் பிராணன் ஒரு காற்று விசேடமன்று: ஒருமிதுன மாயிற்று. திருமகள்சேர் மார்பனாய்க் கொண்டு எனக்குத் தாரகனானவனே! என்னும்’ . - (2) திருக்குடந்தை எம் பெருமானை மங்களாசாசனம் செய்த ஆழ்வார் பாசுரத்தில் ஆழங்கால் படுவோம். இந்த எம்பெருமானை ஆராவமுதே' (5.8) என்ற திருவாய் மொழியில் மங்களாசாசனம் செய்கின்றார். இதன் முதற் பாசுரம், 7. இடத்தை (கும்பகோணம்) : மயிலாடுதுறை திருச்சி இருப்பூர்தி வழியிலுள்ள் ஒரு நிலையம். இத்திரு நகரின் நடுவில் அமைந்திருக்கும் சாரங்கபாணிப் பெருக ள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமான் ஆராஅமுதன். இவன்மீது பாடப் பெற்ற "ஆராவ முதே' எனத்தொடங்கும் திருவாய் மொழியே (5.8) நாலாயிரத் திவ்வியப் பரபந்தம்’ என்ற பக்திப் பனுவல் கிடைப்பதற்கு ஒரு திறவு கோலாக இருந்தது. இஃது ஒரு சுவையான நிகழ்ச்சி. இத்திருக் கோயில் கும்பகோணத்திலுள்ள எல்லாத் திருக்கோயில்களை யும்விட மிகப் பெரி யது . கோபுரமும் அப்படியே மிகப்பெரிதாக அமைந் துள்ளது; பதினொருமாடங்களைக் கொண்டது, பெருமாள் சந்நிதியும் முன்மண்டபங்களும் ஒர் இரதம்போல் அமைக்கப்பெற்றுள்ளன. மண்ட பத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள், இரதத்தை இழுத்துச் செல்லும் குதிரைகள் உள்ளன.இதனை நோக்கிய திருமங்கையாழ்வாரும் இக்கோயில் எம்பெருமானைப்பற்றி திருஎழுக் கூற்றிருக்கை என்னும் பிரபந்தத்தை இரதபந்தம்: என்று சித்திரக் கவியாக அமைத்தனர் போலும்! பக்திசாரர் எ ன் ற திருமழிசையாழ்வார் குடந்தையில்தான் தம் இறுதி நாட்களைக் கழித்து பரமபதித்தார். .