பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 5i திருவாய்மொழிப் பாசுரங்களில் உள்ள சில அடிகள்' நம் சிந்தையைக் கவருகின்றன. மறியொடு பிணைசேர் மாவிருஞ்சோலை’ (2.10 : 6) என்ற அடியில் 'மறியொடு பிணைசேர்’ என்று அடைமொழி கொடுத்ததற்கு ஒர் உட் கருத்து உண்டு. அந்த மலையில் குட்டியும் தாயும் பிரியா திருத்தல்போல் நாமும் தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் ஈசனைப் பிரியாதிருத்தல் என்ற தொணிப் பொருள் தென்படு கின்றது. மழ களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை (2.10 9) என்பதில் மழகளிற்றினம்சேர்’ என்ற விடத்து ஒரு நயத்தைக் காட்டுவர் நம்பிள்ளை; 'லட்சணா பேதமாயிருப்பதொரு ஆனை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேரா நிற்கும். அங்கு நிற்பதோர் சோலை மழகளிறு” என்பதாக. அப்படிப்பட்ட யானையின் அருகே மழகளிற்றினம் சேர்வது வியப்பன்று என்று காட்டியவாறு. மூலவர் பரமசாமியின் அழகில் பறிகொடுத்த நம்மாழ்வார், முடிச்சோதி யாய்உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீகின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின்ம்ைபொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே --திருவாய், 3.1 : ! என்று பாடுகின்றார். நின் திருமுக மண்டலத்தின் ஒளி மேல் முகமாகக் கிளர்ந்து திருவயிடேகச் சோதியாய் வடிவு கொண்டதோ? நின் திருவடியின் ஒளியே கீழ்முகமாகக் கிளர்ந்து சென்று ஆசன பதுமமாக வடிவு கொண்டதோ? நின் திருவரை (இடுப்பு)யின் ஒளி பீதக ஆடையாகவும் பல