பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 55 குன்றம் போல்மணி மாடம் டுே திருக்குரு கூரதனுள் கின்ற ஆதிப்பி ரான்கிற்க மற்றைத் தெய்வம் காடுதிரே (!) என்பது முதல் பாசுரம் . இதில் சகல ஜகத் காரண பூதனான சர்வேசுவரன் திருநகரியிலே எளியனாய்க் காட்சி தந்தருளா நிற்க, வேறு தெய்வங்களை நாடியோடுகின்றீர் களே. இஃது என்ன அறிவுக் கேடு!” என்று வெறுக்கின்றார் ஆழ்வார். - ... முதல் இரண்டடிகள் எம்பெருமானின் ஜகத் காரணத் துவத்தை மூதலிக்கின்றன. தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் ஒன்றும் இல்லா அன்று என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எல்லாப் பொருள்களையும் படைத்தவனான சர்வேசுவரன், தாய் சந்நிதி ஒழிய குழந்தை வளராதாப் போலே, தன் சந்நிதி ஒழிய இவை சீவிக்க மாட்டா எனப் பார்த்துத் திருநகரியிலே எளியனாய் காட்சி தந்தருளா நிற்க, வேறே அடையக் கூடிய பொருளும் உண்டு என்று தேடித்திரிகின்றீர்களே, இஃது என்ன அறிவுக் கேடு!" என்று வேறு தெய்வங்களை நாடுவோரை நோக்கி நிந்திக்கின்றார் ஆழ்வார். இங்கே இன்சுவை மிக்க சட்டு பூர் சூக்தி காண்மின்: "சர்வேசுவரன் நான்முகனைப் படைத் தான்; நான்முகன் ஐம்முகனைப் படைத்தான்: ஜம்முகன் ஆறுமுகனைப் படைத்தான். ஆக, இதுதான் பலமுக மாயிற்றுக் காணும். மேலும், 'நீர் வேட்கையையுடைய ஒருவன் கங்கை பெருகியோடா நிற்க, அதிலே அள்ளிக் குடித்துத் தன்விடாய் தீரமாட்டாதே, அதன் கரையிலேயே குந்தாலி கொண்டு கிணறு தோண்டித் தன்விடாய்க்கு உதவ நாக்கு நனைக்க இருக்குமாறு போலே, அடையத் தக்கவனு மாய், எளியனுமாய், எளிதில் ஆராதிக்கக் கூடியவனுமாய் நல்ல சுவபாவத்தையுடையவனுமான இவனைவிட்டு,