பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 59 5. தென் திருப்பேரெயில்” : இது தென் திருப்பேரை' என்றும் வழங்கப் பெறும்.' நம்மாழ்வார் மட்டிலும் ஒரு பதிகத்தால் (திருவாய் 7.3) இத்தலத்து மகர நெடுங் குழைக்காதனை மங்களாசாசனம் செய்துள்ளார். கண்ண னாகவே ஈடுபட்டுப் பேசுகின்றார். இத்திருவாய்மொழி "மகள் பாசுரமாக நடைபெறுகின்றது. தாய்மாரும் தோழி மாரும் உற்றாரும் தடுக்கவும் அதற்குக் கட்டுப்படாமல் தலைவி தென் திருப்பேரெயில் செல்லத் துணிவதை இஃது எடுத்துரைக்கின்றது. பராங்குச நாயகிக்குத் திருப்பேரெயில் எம்பெருமானைக் கிட்டியே தீர்வேன்’ என்னும் ஆற்றாமை பிறக்கின்றது. அந்த எம்பெரு மானிடம் போக வேண்டும் என்று புறப்படு கின்றாள் ஆழ்வார் நாயகி, தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழ்ந்து கொண்டு உனக்கு அவனிடம் இவ்வளவு ஈடுபாடு ஆகாது; இது நமக்குப் பழியாக முடியும்’ என் கின்றனர். நீங்கள் தடை சொல்லுகின்றவற்றால் ஒரு 19. திருப்பேரெயில் : இத்திருத்தலம் நெல்லை - திருச் செந்தூர் நெடுஞ்சர்ன்லயில் உள்ளது; ஆழ்வார் திருநகரியிலிருத்து மூன்று கல் தொலைவிலுள்ளது. தண்பொருநை யாற்றின் தென்கரையிலுள்ள இத்தலம் வே திருப்பதிகளில் ஐந்தாவது ஆழ்வார் திருநகரியிலிருந்து மாட்டுவண்டி கிடைக்கும். இங்கிருந்து தென் பொருநையைக் கடந்தால் ( கல் தொலைவு) தொலை வில்லிமங்கலத்தை அடை யலாம். எம்பெருமான் : மகர நெடுங்குழைக் காதன், நிகரில் முகில்வண்ணன். வலது கை : வரத ஹஸ்தம். தாயார் : குழைக்காதுவல்லி நாச்சியார். இருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 11. இத்திருத்தலத்தின் பெயர் 'திருப்பேரெயிலா? - "திருப்பேரையா?-என்பது பற்றிய ஆ ய் ைவ 'பாண்டி காட்டுத் திருப்பதிகள்’ (கட்டுரை-11) பக் 196-197 காண்க, -