பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சடுகுடு ஆட்டம்


இதை அடிக்கடி ஆட்டக்காரர்கள் பயன்படுத்துவ தில்லை. நன்கு அனுபவம் உள்ள ஆட்டக்காரர்களே இதனை அபாயமின்றி சரியான முறையில், வெற்றிகரமாகச் செய்திட முடியும்.

உ) தோளைப் பிடிக்கும் முறை (Round the Shoulder Hold)

பாடி வருபவரைக் கால் அல்லது கையைப் பிடித்து இழுத்து ஆட்டமிழக்கச் செய்வது போலவே, தோள் பகுதியையும் பிடித்து நிறுத்துவதும் ஒருவகைப் பிடிமுறையாகும்.

ஏறத்தாழ நடு ஆடுகளத்திற்குள் பாடி வருபவர் முன்னேறி வந்துவிட்டால், பிடிப்பவருக்கு, அதாவது அவரது கைகளுக்கும் எட்டுவது போல அருகாமையிலும் நின்றுவிட்டால் பாடுபவர் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று பாய்ந்து, தோளுக்கும் கீழே அக்குளைச் (Armpit) சுற்றி ஒரு கையாலும், விரல்களைப் பற்றி அழுத்தி மற்றொரு கையாலும் பிடித்துவிட வேண்டும்.

விரல்களையும் தோளையும் பற்றி ஒரே சமயத்தில் வெடுக்கென்று இழுக்கும்பொழுது, பாடுபவர் தடுமாறி சமநிலை இழந்து போவார். எல்லாப் பிடி முறைகளைப் போலவே, இதுவும் ஒரு சிறந்த பிடிமுறையாகவே ஆட்டத்தில் பயன்படுகிறது.

நீண்ட கைகள் உடைய ஆட்டக்காரர்களுக்கு இந்தப் பிடி பிடித்து இழுத்து நிறுத்த, கைகள் நீளமாக இருப்பது ஆளை தன் பிடிக்குள் போட, பற்றுக் கோடாகத் தோளைப் பிடிக்கப் பயன்படுவதால், இம்முறையை உயரமாகவும் அதே சமயத்தில் நீளமான கையுள்ள