பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



40

3. பாடிச் செல்பவருக்குரிய திறன் நுணுக்கங்கள்

பாடி ஆட்டமானது, எதிரெதிர்க் குழுவைக் சேர்ந்தவர்கள் உடல் மோதும் தொடர்பு கொண்டு தந்திரமாக, தன் திறத்தைப் பயன்படுத்தி வெற்றி காணும் வேகம் மிகுந்த செயல் முறைகளால் உருவாக்கப்பட்டதோர் ஆட்டமாகும்.

ஏறக்குறைய இருவர் தனித்து நின்று போட்டியிடுவது போல, பாடிச் செல்பவர், பிடிப்பவர் என்பவருக்கிடையே நடக்கும் வல்லமை நிறைந்த போட்டியாகும். சில சமயங்களில் தனியாளாகப் பாடிச் செல்பவர்க்கும், பிடித்தாடுபவர்களாக இருக்கும் மறு குழுவைச் சேர்ந்த பலருக்கும் ஏற்படக்கூடிய