பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சடுகுடு ஆட்டம்


அ) பாதத்தால் தொடுவது (Toe Touch)

ஆ) முன்புறமாக உதைப்பது (Front Kick)

இ) பக்கவாட்டில் உதைத்துத் தொடுவது (Side Kick)

ஈ) குறுக்காக உதைப்பது (Cross Kick)

உ) சுற்றி வந்து உதைப்பது (Roll Kick)

ஊ) பின்புறமாக உதைப்பது (Mule Kick)

எ) துள்ளி உதைப்பது (Aero Kick)

ஏ) உட்கார்ந்து உதைப்பது (Sqaut Leg Thrust)

ஐ) தாண்டிக் குதித்து வரும் முறை (Jumping Over Anti)

பாடிச் செல்லும் ஆட்டக்காரர், எதிர்க்குழுவில் பிடிக்கத் தயாராக இருக்கும் ஆட்டக்காரர்களை, கையால்தான் தொடப் போகிறார் என்று நம்பும்படியாக பாவனை செய்த வண்ணம், அவர்கள் கவனம் முழுவதையும் அசைகின்ற கைகளில் பதியுமாறு செய்து கொண்டிருந்துவிட்டு, அவர் தனது கைகளைப் பிடிக்க முயலுகின்ற சமயத்தில், திடீரென்று தனது ஒரு காலை நீட்டி எதிராட்டக்காரரைத் தொட்டு விடுவதுதான் காலால் தொடும் அற்புதக் கலையாகும். அதற்கென்று ஒரு சில முறைகளையும் குறிப்புக்களையும் தெரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.

காலால் எதிராளியைத் தொடுவதானது நின்று கொண்டே காலை நீட்டித் தொடுவது, உட்கார்ந்த வண்ணம் காலை நீட்டித் தொடுவது, துள்ளிப் பின்புறமாகக் காலை நீட்டித் தொடுவது என்று பல பிரிவுகளாக அமையும். இவ்வாறு செய்கின்றபொழுது, ஏற்கனவே நல்ல பயிற்சியும், போதிய அனுபவமும் இல்லாமற் போனால், உடல் சுறுசுறுப்பாக