பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

சடுகுடு ஆட்டத்திற்கான கலைச் சொற்களையும் ஆங்காங்கே தந்துள்ளேன். இன்னும் பொருத்தமான சொற்கள் என்று உங்களுக்குத் தோன்றுகின்ற சொற்களையும் எழுதி அனுப்புங்கள்.

இந்நூலை அழகாக அச்சிட்டுத்தந்த கிரேஸ் பிரிண்டர்சுக்கு என் நன்றி.

நூல் தயாரிப்பின் ஆக்க வேலைகள் அனைத்தையும் அழகாக செய்து முடிக்கின்ற திரு.ஆர்.சாக்ரட்டீசையும் இந்த நேரத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய நூல்கள் அதிகமாக வர வேண்டும் என்ற ஆசையில் எழுதி பதிப்பித்துக் கொண்டு வரும் அரிய முயற்சிகளுக்கும், உயர்ந்த நோக்கத்திற்கும் உறுதுணையாகவும் ஒத்துழைப்பையும் தந்து ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும், என் அன்பு கலந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்,
எஸ்.நவராஜ் செல்லையா
 

1988–ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் ஆசிரியரின் முன்னுரை அப்படியே அச்சிடப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சடுகுடு_ஆட்டம்.pdf/7&oldid=1049970" இலிருந்து மீள்விக்கப்பட்டது