பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

81

கைகளுக்கு நல்ல பலம், தேக சக்தி தேவைப்படுகிறது. அதனை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு அல்லாமல், தங்களுக்கு, மூட்டுப் பிசகிக் கொள்ளுதல், மற்றும் துன்ப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் பாதுகாப்புடன் பிடித்து ஆடுகின்ற முறைகளையும் பயின்று கொள்ள வேண்டும்.

7. பிடிப்பு (Grip) எப்போதும் கெட்டியாக இருக்க வேண்டும். அது வலிமையுடனும், விடாத் தன்மை யுடனும் இருக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் வலிமையானது, ஆளுக்கு ஆள் வேறுபடும். வெறும் உடல் சக்தியினால் மட்டும் இந்தத் திறன் வந்துவிடாது. முறையாகப் பெறுகின்ற பயிற்சியினால் மட்டுமே நிறைவாகக் கிடைக்கும். இது போன்ற பிடி முறைகள் என்னென்ன என்பதை பின்வரும் பக்கங்களில் முறையாக விளக்கப்பட்டிருக்கின்றன என்பதால், தேவையை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறோம்.

8. ஒவ்வொரு முறையும் பாடி வருபவரைப் பிடிக்க முயல்கின்றபொழுது, துணிவுடன் முயன்றாலும், வெற்றிகரமாக நிறைவேறும் என்று கூறிவிட முடியாது. அதில் தோல்வியும் வரும். முயற்சி செய்கின்றபொழுது, அது சரியான பிடி கிடைக்கக்கூடியதாக அமையுமா என்று இடம் பார்த்து, நேரம் பார்த்து முயல்வதுதான் சிறந்த பிடித்தாடும் ஆட்டமாகும்.

9. அலட்சியமாகப் பிடித்திட முயல்வது தன் குழு ஒர் ஆட்டக்காரரை இழந்துபோக விடுவதுடன், எதிர்க்குழுவிற்கு ஒரு வெற்றி எண்ணையும் தந்து, வெளியே நிற்கும் இன்னொரு எதிர்க்குழு ஆட்டக்காரரைத் தொடர்ந்து ஆட ஆடுகளத்திற்கு உள்ளே