பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

91


பிடிப்பவரின் அருகில் ஏதாவது ஒரு கால் இருக்கும்பொழுது, பிடித்துவிடுகின்ற முறையைத்தான் ஒரு முழங்கால் பிடி என்று கூறுகிறோம்.

பிடிக்கின்ற முறையில் கைகள் சாதாரண நிலையில் பிடித்தாலும் சரி அல்லது கைகள் இரண்டையும் துணையாகக் கோர்த்தபடி பிடித்தாலும் சரி, பிடித்த உடனேயே காலை மேலே தூக்கிவிட்டால், பிடிபட்டவர் சமநிலை இழந்து கீழே விழ நேரிடும். பாட்டும் நின்றுபோய் விடும். ஆகவே, ஒரு முழங்காலைப் பிடித்த உடனே காலை மேலே தூக்கி விடுவதை மறக்காமல் செய்து பழகவும்.

ஈ) இரு முழங்கால் பிடி முறை (Double Knee Catch)

பாடி வருபவரின் இரு கால்களும் இணைந்தாற் போல இருந்து, சற்று வளைந்தாற் போலவும் இருந்து,