பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

93


பிடிபட்டவர், சற்று குனிந்த நிலையில் இருந்து கொக்கி போட்டு பிடிப்பது போல் ஒரு தொடையைப் பிடித்துக் கொள்வதைத் தொடைப் பிடி முறை என்கிறோம்.

தொடையைப் பிடித்தவுடன், ஒரு சுண்டு சுண்டி யிழுத்து, மேலும் அடித் தொடையையும் சேர்த்துப் பிடிக்கும்பொழுது உடல் சமநிலையிழந்து, பிடித்தவர் தோளையே பற்றிச் சாய்ந்து விழவும் நேரிடும். அதனால், எவ்வளவுதான் முயன்றாலும், பிடிபட்டவர் தப்பித்துப் போகவே முடியாது. ஆகவே, கவனமாகவும், கருத்தாகவும் தொடைப் பிடி பிடிக்கும்பொழுது நடந்து கொள்ள வேண்டும்.

ஊ) இரு தொடைப் பிடி முறை (Double Thigh Catch)

இந்தப் பிடியும் இரு முழங்கால் பிடி போடுவது போல்தான். பாடி வரும் ஆட்டக்காரரின் இரு கால்களும் சேர்ந்தாற்போல் இருக்கும்பொழுது பிடிக்கலாம். இரு