பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 11 கட்சியின் போக்கிலே மத்திய அரசை ஆளுங்கட்சியான தி.மு.கழகம் அணுக முடியாது. அதை நான் புரிந்து கொள்கிறேன். பழியை ஏற்றுக் கொள்ளும் பொறுப்பை மத்திய அரசுமீது போட்டுவிட்டு, தனது நிலை என்ன என்பதை எடுத்துச் சொல்ல தமிழக அரசு முனைவதை நான் எதிர்க்கவில்லை. அரசின் நிலையை இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஆம்; சுயாட்சியை, குறைந்தபட்ச சுயாட்சி, என்றும். அதிகபட்ச சுயாட்சி என்றும் பிரித்துக் கொண்டால். தீர்மானம் அதிகபட்ச சுயாட்சியைக் கோருகிறது; வெள்ளை அறிக்கையின் முன்பகுதியும் அதிகபட்ச சுயாட்சி என்று சொல்லுகிறது; பின் பகுதிதான் குறைந்த பட்ச சுயாட்சியைக் கோருகிறது. கொள்கை அளவில் அதிகபட்ச சுயாட்சி; ஆனால், கோரிக்கையாக வைக்கும் இடத்தில் குறைந்தபட்ச சுயாட்சியை முதல்வர் கேட்டிருக்கிறார். வேறெந்த முதல்வரிடமும் காண முடியாத இந்த ராஜ தந்திரத்தை நம்முடைய நாட்டு முதல்வரவர்கள் கடைப் பிடிக்கிறார்களென்று எண்ணுகிறேன். அது வெற்றி அடைய வேண்டுமே என்பதுதான் என்னுடைய கவலை. வெற்றி அடையா மல் போய்விடுமோ என்பதுதான் என்னுடைய வேதனை. பொதுவாக, குறைந்தபட்சக் கோரிக்கையாகக் கருதி, இத் தீர்மானத்தையும் வெள்ளை அறிக்கையையும் தமிழரசுக் கழகத்தின் சார்பில் நான் ஏற்கிறேன். அனால், ஏன் இதைக்கூட எதிர்க்கட்சிக்காரர்கள் எதிர்க்கிறார்கள், ஏற்க மறுக்கிறார்க. ளென்பதுதான் எனக்குப் புரியவில்லை. சுயாட்சிக்குப் பிரிவினை என்று மாற்றுப் பெயர் வைக்கிறார் கள். நான் அவர்களையெல்லாம் வேண்டிக் கொள்ளுகிறேன்; இந்த உலகத்தில் நாம் மட்டும் இல்லை. தமிழ் நாட்டிற்கு வெளியே இந்தியாவிற்கு வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது. உலக நாடுகளெல்லாமே இந்தியாவுக்கு நட்பு நாடுகளல்ல: பகை