பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ம.பொ. சிவஞானம் தீட்சிதர் சொன்னதையே நானும் திருப்பிச் சொல்லுகிறேன்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே வெளியேற்றி வெற்றிபெற்ற தமிழருக்கு-கட்டபொம்மன் சாதிக்கு- கப்பல் ஓட்டிய தமிழன் சாதிக்கு-இந்த டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி காண்பது முடியாத காரியம் அல்ல. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சரித்திரம் காங்கிரஸ் கட்சிக்கு ஏகபோகமாக இருந்த காலம் போய்விட்டது. இன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்களில் சிலர்தான் அங்கே! பலர் வெளியே இருக்கிறார்கள். அரசியல் சட்டத்தைத் திருத்தவே கூடாது. திருத்தாமலே அதிகாரங்களைப் பரவலாக்கலாம் என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்தைத் திருத்தாமல், அதன் கட்டுக்கோப்பைக் குலைக்காமல். அதிகாரங்களை பரவலாக்குவது எப்படி சாத்தியமாகும்? நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மிகவும் பண்புமிக்கவர். பாரத நாட்டிலேயே! அவர்கள் நமக்குக் கிடைத்தது அரியவாய்ப்பாக இருக்கிறது. அவரையே கேட்கிறேன்,அரசியல் சட்டத்தைத் திருத்தாமல் அதிகாரங்களைப் பரவலாக்குவதை எப்படிச் செய்யமுடியும்? எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். நான் கோரும் இந்த விளக்கத்தை அந்த அவையிலும் யாரும் சொல்லவில்லை; இங்கேயும் சொல்லவில்லை. மத்திய அரசிடமுள்ள சில வரி இனங்கள் மாநிலத்திற்குத் தேவைப்படுகின்றன. அதை எப்படிப் பெறுவது? சட்டத்தைத் திருத்தாமல் மத்தியத்திற்குள்ள வரி இனங்களை எப்படி மாநிலத்திற்கு மாற்ற முடியும்? அதிகாரங்களை, மாகாணப் பட்டியல். மத்திய பட்டியல், பொதுப்பட்டியல் என்று பிரித்து இருக்கிறார்கள். ஒரு பட்டியலில் உள்ள அதிகாரங்களை இன்னொரு பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்றால், சட்டத்தைத் திருத்தாமல் எப்படி முடியும்? சட்டத்தைத் திருத்தாமலே மாற்றுவதற்கு வழிவகை இருக்கிறதா? - சொல்லுங்கள்.