பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் 51 வேண்டுமென்பதற்காக ஒரு குழுவை அமைக்க வேண்டுமென்று இந்த அரசு கருதுகிறது' என்று நான் அறிவித்திருக்கிறேன். அப்படிப்பட்ட குழுவில் இந்தக் கொள்கைகளை ஒத்துக் கொள்ளுகின்ற அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. இந்தக் கட்சியினுடைய கொள்கை களைப் புரிந்துகொண்டு நம்முடைய கொள்கைகளுக்கேற்ப என்னென்ன அதிகாரங்களை மாநிலங்கள் மத்திய அரசிலிருந்து பெறலாம் என்று திட்டவட்டமாக வரையறுத்துக் கூற சட்ட நுணுக்க அறிவும் வேறு பல ஆற்றல்களும் அமைந்த தகைமை சான்றவர்கள் அந்தக் குழுவில் இருக்க வேண்டுமென்று கருதி, அப்படிப்பட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு மூவர் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினுடைய பணியாகக் கூட்டாட்சித் தத்துவம் முழுமையும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற வேண்டும்; மத்திய அரசு அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும்; மாநில அரசு அதிகாரங்கள் விரிவாக்கப்பட்டு மாநிலங்கள் பூரண தன்னாட்சி உரிமை பெற்று விளங்கத் தேவையான திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்திலே செய்வதற்கு அவர்கள் நமக்கு யோசனை கூற வேண்டுமென்ற அடிப்படையில் அந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவுக்குத் திரு, பி.வி. ராசமன்னார் அவர்கள் தலைவராகவும், திரு.ஏ. லட்சுமணசாமி முதலியார் அவர்களும், திரு.பி. சந்திரா ரெட்டி அவர்களும் உறுப்பினர்களாகவும் இருந்து நல்ல முறையில் பணியாற்றி மாநிலங்கள் எந்தெந்த அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து பெறலாம் என்பதற்கான திட்டவட்டமான விளக்கங்களைத் தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த எந்த அதிகாரங்களைப் பெறலாம் என்பதற்கான குறிப்புகள் கொடுங்கள். அறிக்கை கொடுங்கள்' என்று அந்தக் குழுவினிடத் தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் மூவரும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒத்துழைப்புத் தர ஒத்துக் கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்.