பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ம.பொ.சிவஞானம் சூழ்நிலை மாறிவிட்டது. அத்துடன், இந்தியாவைச் சுற்றிலும் பகை உணர்வு இருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் பிரிவினை தேவையில்லை என்பதனை உணர்ந்து, மாநில சுயாட்சி கேட்கிறது தி.மு.க. எதிர்க்கட்சியினருக்கு உண்மையான தேசபக்தி இருக்குமா னால், இந்த மனமாற்றத்தை இரு கைகளையும் கொடுத்து வரவேற்று இருக்க வேண்டும். மாநில சுயாட்சிக் கோரிக்கை அடிப்படையில் சமரசப் பேச்சைத் தொடங்கியிருக்க வேண்டும். திரு. கருத்திருமன்: 'தேசபக்தி இருக்குமானால் என்று சொன்னால் நான் தேசபக்தி இல்லாதவனா? பேரவைத் துணைத் தலைவர்: நீங்கள் பேசும்போது அப்படிச் சொல்லவில்லையா? ம.பொ.சி. அப்படி நான் கருதியிருந்தால், 'தேசபக்தி இல்லாதவர்' என்று முற்றுப்புள்ளி வைத்தே சொல்லியிருப்பேன். ஆனால், நான் கமா போட்டு, அவர் (எதிர்க்கட்சித் தலைவர்) எழுந்து. தனக்குத் தேசபக்தி இருப்பதாகச் சொல்லட்டும்; விவாதத்திற்குக் கொஞ்சம் சுவை யூட்டட்டும் என்றுதான் நிறுத்தி வைத்தேன். அவருக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன். எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை நினைப்பூட்ட விரும்புகிறேன்; தஞ்சை பிரகதீசுவரர் கோயில் தமிழ் நாட்டைச் சேர்ந்தது- தமிழ் மன்னரால் கட்டப்பட்டது. அந்தக் கோயிலிலே - அதைக் கட்டிய மன்னனின் சிலையை வைக்க இந்த மாநில ஆட்சி ஒரு சிறப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சொன்னால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. கோயிலைக் கட்டியவனுடைய -அதற்கு மானியம் விட்டவனுடைய உருவச் சிலையை, காவல்காரனைப் போல, கோயிலின் நுழைவாயிலிலே வைக்கவேண்டும்; உள்ளே வைக்கக்கூடாது" என்று மத்திய அரசு கூறுகிறது.