107 இனி, திருவிளையாடற்புராணத்திற் கூறப்படும் சரித்திரமாவது:- கடற்புறத்துள்ள ஒருபட்டினத்திற் செல்வமிகுந்த ஒருவணிகன் தான் தவங்கிடந்து பெற்ற ஒரேபுதல்வியை மதுரையம்பதியில் முதன்மணமுடித்து வாழ்ந்து கொண்டிருந்த தனது மருகற்கு மணஞ்செய்விக்கும்படி சுற்றத்தாருக்கு அறிவித்து, ஊழ்வினை வலியால். மனைவியுந் தானும் உயிர்துறக்க, அதனையறிந்த மருகன், மிக்க துயரத்துடன் அப்பட்டினத்தையடைந்து, மாமன்மனையிற் சின்னாளிருந்த, தனது மாமன்புதல்வியை மதுரைக்குக் கொண்டுபோய், ஆங்கு உறவினர் முன்னிலையில் மணந்து கொள்வோமென்று, அக்கன்னியையும் அழைத்துக்கொண்டு, அவ்விடத்து விடைபெற்று, மதுரையை நோக்கிச் செல்லுங்கால், வழியில் ஓரிரவில் திருப்புறம்பயம் என்னும் மூதூரின்கண் தங்கி, ஆண்டுச் சிவபெருமான் திருக்கோயிற்கருகில் வன்னிமரத்தடியிற் போனகமமைத்துண்டு, கோயில் வாயிற்படியின்மீது தலைவைத்துறங்கும் போது அவ்வணிகன் ஓரரவால் தீண்டப்பட்டிறக்க, அதனையுணர்ந்த அவ்வணிகமாதும் மற்றையோரும் பக்கத்திருந்து வருந்தியலறுகையில், அவ்வூர்மடாலயத்தெழுந்தருளியிருந்த ஆளுடைய பிள்ளையார் இந்நிகழ்ச்சியையறிந்து, திருக்கோயிலையடைந்து, சிவபெருமானைத் துதித்துப் பதியமோதி, அவனை உயிர்பெற்றெழச் செய்து, பின்னர் அவ்விருவரையும் அவ்விடத்திலேயே திருமணஞ்செய்து கொண்டு செல்லவேண்டுமென்று திருவாய் மலர்ந்தருளலும், இதனைக்கேட்ட வணிகன் தனது உறவினர்களும் மன்றற்குரிய சான்றுகளுமின்றி மணமுடித்தற் குடன்படானாய்நிற்க, கருணையங் கடலாங் காழிவள்ளலார், உன்மன்றற்கு ஈண்டுக்காணப்படும் வன்னியும் கிணறும் இலிங்கமும் சான்றுகளாகு" மென் றுரைத்துத் திருமணம் புணரும்படி கூறலும், அவ்விருவரும் அப்பெருமானானையைக் கடத்தற்கஞ்சினோர்களாய் அவ்விடத்து மணஞ்செய்து கொண்டு, மதுரையையடைந்து வாழ்ந்துவரும் நாளில், அவ்வணிகன் மூத்தமனைவியின் புத்திரர்களும் இளையாள் மைந்தனும் சண்டையிட்டுக்கொள்ள, அதனால் மூத்தாள் கோபமூண்டு இளையாளை நோக்கி, "முறைமையான ஜாதி, குலம், ஊர், பேர் முதலியனவின்றி எனதுகணவனைக்காதலித்துப் பின்றொடர்ந்து வந்த காமக்கிழத்தியாகிய நீ என்மணாளனை மணந்ததற்குச் சான்றுகள் உளவாயின், சொல்லுக! என்று கூறலும், இதனைக்கேட்ட இளையாள் நாணமுற்று, 'என்னாயகன் அரவாவிறந்தஞான்று ஆருயிரீந்தருளிய ஆளுடைபிள்ளையாரருளினால் ஆண்டருகேயிருந்த வன்னியும் கிணறும் இலிங்கமும் எம்மன்றற்குச் சான்றுகளாயுள என்று கூறலும், இதனைக்கேட்ட மூத்தாள் நகைத்து நின்மற்றற்கேற்றசான்று களுரைத்தனை! நல்லது! அவை யீண்டுவருமாகில் அதுவும் மெய்யே! என்றுரைக்க, இனளயாள் மிக்க துயரத்துடன் சிவ பெருமானை நினைந்து அற்றை நாளிரவு உண்டியு முறக்கமு