பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



110| அன்றியும், திருஞானசம்பந்தசுவாமிகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவரென்று காலஞ்சென்ற திருவனந்தபுரம் ப்ரொபஸர் சுந்தரம்பிள்ளையவர்கள் நன்காராய்ந்து தமது திருஞானசம்பந்தர் காலம் என்னும் ஆங்கில நூலிற் கூறியிருக் கின்றனர். மூன்றாஞ்சங்கம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய காலங்களிலும் நின்று நிலவியதாகலின், திருஞானசம்பந்தசு வாமிகள் மூன்றாஞ்சங்ககாலத்திற்குப் பன்னூற்றாண்டுகட்குப் பின்னர் இருந்தவரென்பது நன்கு விளங்குகின்றது. இன்னும் தமிழ்மாது செழிப்புற்று மகோன்னதநிலைமையிலிருந்த மூன்றாஞ்சங்ககாலத்தில், தனித்தமிழ்ச்செய்யுளாகிய ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் நான்கனுள், பெரும்பான்மை ஆசிரியப்பாவும் வெண்பாவும் சிறுபான்மை எஞ்சியவிரண்டு பாக்களும் நடைபெற்று வந்தனவேயன்றி, நம் சுவாமிகள் காலத்துப் பெருவழக்காகக் காணப்படும் விருத்தப்பாக்கள் நடைபெற்றதில்லையென்பதும் மேற்கூறியதை வலியுடைத்தாமாறு செய்தலைக் காண்க. இதுகாறுங் கூறியவற்றாற் சுவாமிகள் மூன்றாஞ்சங்கத்திற்குப் பிந்தியவரென்பது நன்கறியக் கிடக்கின்றது. மூன்றாஞ்சங்ககாலத்தில் (அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) இயற்றப்பெற்ற நூலாகிய சிலப்பதிகாரத்தில் மேற்கூறியசரிதம் மிகச்சுருக்கமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றமையால் இந்நூல் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னரே இச்சரிதம் நடைபெற்றிருக்கவேண்டுமென்பது தெற்றென விளங்குகின்றது. இதனாற் சிலப்பதிகாரமியற்றப்பெற்ற காலத்திற்குப் (அதாவது மூன்றாஞ்சங்ககாலத்திற்குப்) பன்னூற்றாண்டுகட்குப் பின்னிருந்த திருஞானசம்பந்தசுவாமிகள் இச்சரித்திரத்திற் சொல்லப்படும் வணிகருக்கு ஆருயிரளித்தருளினார் என்று திருவிளையாடற் புராணத்துச் சொல்லப்பட்டிருப்பது சிறிதும் பொருந்தவில்லை யென்க." அன்றியும் திருஞானசம்பந்தசுவாமிகள் திருவாய்மலர்ந் தருளிய திருப்புறம்பயத்தேவாரப்பதிகத்திற் காணப்படும் விழுங்குயிரு மிழ்ந்தனை என்னும் வாக்கியத்தினால் அரவாலிறந்த வணிகனுக்குப் புறம்பயத்துறை இறைவன் இன்னுயிரீந்தருளினா ரென்பது சுவாமிகட்கும் உடன்பாடாதலுணர்க. இனி, மிகப்பழைய காலத்தில், புறம்பயத்துறை சிவபெருமான் சனகாதிநால்வர்க்கு அறம்பயனுரைத்தருளிய விஷயத்தை “நால்வர்க்கறம்பயனுரைத்தனை புறம்பயமமர்ந்தோய்' என்று முதலாவது பாசுரத்தில் சுவாமிகள் இறந்தகாலத்திற் கூறியருளியது போல், மூன்றாவது பாசுரத்திலும் 9. cf. Tamilian Antiquary No. 3. 10. பழையதிருவிளையாடலியற்றியருளிய நம்பியார்கூற்றும் பொருந்தவில்லையென்பது ஈண்டுக் கவனிக்கத்தக்கது.