114 பேசிவைத்தார்மற்றொன்றும்பிச கேயில்லை (மேற்படி 600) மேலேவரைந்துள்ள செய்யுட்களில் வியாசர்பாரதமும், கம்பர் இராமாவதாரமும், அதிவீரராம பாண்டியர் நைடதமும், சைவ சமயாசாரியர் - நால்வரும் திருவாய்மலர்ந்தருளிய தேவார திருவாசகங்களும், மக்கட்குப் பயன்படாப் பொய்ந்நூல்களென்று சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள், இராமாவதாரமியற்றியருளிய கம்பர், (1120 கி.பி. - 1200 கி.பி) கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையில் விளங்கியவராதல் வேண்டு மென்று சேது ஸமஸ்தானத்தின் வித்வான் பரும்மஸ்ரீ உ.வே.ரா.இராகவையங்காரவர்கள் செந்தமிழ் 3-ஆம் தொகுதி 6-ஆம் பகுதியில் நிரூபணங் செய்துள்ளார்கள். தமிழில் நைடதமியற்றியருளிய அதிவீரராமயாண்டியரே, கூர்மபுராணம், இலிங்கபுராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துப்பாடியருளிய அரசரேறென்ப. இம்மன்னர் பெருமான், சகம் 1486-ல் தென்காசியில் முடிசூட்டப் பெற்று சகம் 1514 வரை ஆட்சிபுரிந்தனரென்று தென்காசிக் கோயிற் கோபுரத்திற்காணப்படுஞ் சிலாசாசனங்கள் அறிவிக்கின்றன.* ஆகவே, இவ்வரசர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறுதியில் (கி.பி. 1564 - கி.பி. 1592) வாழ்ந்த வராதல் வேண்டும். இனி, திருக்குறளருளிய திருவள்ளுவனார் தம்நூலை, அக்காலத்தே தென்மதுரையகத்துத் தமிழுக்கரசராய் வீற்றிருந்தருளிய மூன்றாஞ் சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மரது முன்னிலையி லரங்கேற்றி யுள்ளாரென்பது, அச்சங்கத்துச் சான்றோர் அதனைத் தங்கள் செவியாரக் கேட்டு மனமார வுவந்து வாயாரப் புகழ்ந்து பாடியுள்ள திருவள்ளுவ மாலைப்பாடல்களால் நன்கு விளங்கும். மூன்றாஞ்சங்கம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும் அதற்கு மத்தியகாலங்களிலும் நின்று நிலவியதாகலின் அச்சங்கத்திறுதிக்காலத்தில் தம் நூலையரங் கேற்றிய திருவள்ளுவனாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கியவராகற்பாலர். இதுகாறுஞ் செய்த வாராய்ச்சியால், திருக்குறளருளிய திருவள்ளுவனார் கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலும், இராமாவதாரமருளிய கம்பர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டினிடையிலும், நைடதமியற்றிய அதிவீரராமபாண்டியர் கி.பி. 16-ஆம் நூற்றாண்டினிறு தியிலும் வாழ்ந்தவர்களென்பது நன்குவெளியாதல் காண்க. இதனால், கம்பரும் அதிவீரராமபாண்டியரும் திருவள்ளுவனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பிற்பட்டவர்களென்பது இனிது விளங்கும். ஆகவே, மேற்கூறிய கம்பரையும் அதிவீரராமபாண்டியரையும் தம் ஞானவெட்டியில் நிந்தித்துப் Travancore Archaeological series No. VIp.p. 26.