115 போந்த ஆசிரியர் திருக்குறளருளிய திருவள்ளுவனாரென்று கூறல் சிறிதும் பொருந்தாதென்க. அன்றியும், திருக்குறளுக்குச் சிறந்தவுரைவரைந்தவரும் இருபெருமொழியினும் நுண்மானுழை புலன் படைத்த பேரறிவாளரு மாகிய ஆசிரியர் பரிமேலழகர் நம் தெய்வப் புலவரியற்றிய வேறு நூல்களிருப்பின், திருக்குறளுக்குத் தாம் எழுதியவுரையில், அந்நூல்களிலிருந்து ஆங்காங்கு மேற்கோள்கள் எடுத்துக்காட்டி ஆசிரியர்கருத்தை விளக்கிச் செல்வார். அவர் அங்ஙனம் எடுத்துக்காட்டாமையால் நமது பெருநாவலர் திருக்குறளைத் தவிர வேறுநூலொன்றும் இயற்றினாரில்லையென்பது நன்கு புலனாம். இனி, ஞானவெட்டியின் ஆசிரியர் தம்நூலிற் சில பெரியோர்களை நிந்தித்திருப்பதுபோல் வேதத்தையும் அந்தணரையும் பல்காலும் நிந்தித்திருக்கின்றனர். நமது திருவள்ளுவனார் அங்ஙனம் செய்யாரென்பது. அந்தன ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்' (3-வது அதிகாரம் 10) மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" (14-வது 4) “அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் " (55-வது 3) "ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின்" (56-வது 10) என்னும் குறள் வெண்பாக்களா ளினிதுவிளங்கும். இனி, ஞானவெட்டியுடையார் தம் நூலில் தம்பெயர் திருவள்ளுவரென்றும், தாமே 1300 குறள் வெண்பாக்களையுடைய திருக்குறளியற்றி வைத்தவரென்றும் கூறியிருத்தல் ஈண்டுக் கவனிக்கத் தக்கது.* இவ்வாசிரியர் திருவள்ளுவரென்னும் பெயருடைய வராயிருக்கலாம். ஆனால், திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறல் சிறிதும் பொருந்தாது. தம்மைத் தத்துவங்களுணர்ந்த சிறந்த ஞானியென்றும் தம்நூலே உலகிற்குப் பயன்படக்கூடிய அரிய நூலென்றும் வாய்ப்பறைசாற்றிச் செல்கின்ற இவ்வாசிரியர் இங்ஙனம் பொய்கூறற்கு எங்ஙனம் துணிவுற்றனரோ அறியேம். அன்றியும், உலகிற்குபகாரமாய்த் திருக்குறளைத் தாமியற்றி வைத்ததாகச்
- பெருநூல்களாயிரத்தைந் நூறிந்நூல்
முன்னமேயான் பாடிவிட்டேனாயிரத்து முந்நூறு முடித்துவைத்தேன் குறளது வாயுல கோர்க்காண்டே" (ஞானவெட்டி 1737.)