119 பொதியப்பொருப்பன் மதியக்கருத்தினைக் கொங்குதேர்வாழ்க்கைச் செந்தமிழ்கூறிப் பொற்குவைதருமிக் கற்புடனுதவி என்னுளங்குடிகொண் டிரும்பயனளிக்குங் கள்ளவிழ்குழல்சேர் கருணையெம் பெருமான் என்பது ஆலவாயெம்பெருமான் கொங்கதேர்வாழ்க்கை"* என்னுஞ் செந்தமிழ்ப் பாடலருளித்தருமிக்குப் பொற்கிழியுதவியதை யுரைக்கின்றது. “உலகியனிறுத்தும் பொருண்மரபொடுங்க மாறனும்புலவரு மயங்குறுகாலை முந்துறும்பெருமறை முளைத்தருள்வாக்கா லன்பிணைந்திணையென் றது பதுசூத்திரங் கடலமுதெடுத்துக் கரையில்வைத்தது போற் பரப்பின்றமிழ்ச்சுவை திரட்டிமற்றவர்க்குத் தெளிதரக்கொடுத்த தென்தமிழ்க்கடவுள்" என்பது கூடல்வாழிறைவன் களவியல் அருளியவரலாற்றைக் கூறுகின்றது. “சமயக்கணக்கர் மதிவழிகூறா துலகியல்கூறிப் பொருளிதுவென்ற வள்ளுவன்றனக்கு வளர்கவிப்புலவர்முன் முதற்கவிபாடிய முக்கட்பெருமான் என்பது தமிழ்ச்சங்கப்புலவர்முன் இறைவன் திருக்குறளுக்குச் சிறப்புக்கவியாக முதற்கவிகூறியருளியதை யுணர்த்துகின்றது. அருந்தமிழ்க்கீரன் பெருந்தமிழ்பனுவல் வாவியிற்கேட்ட காவியங்கனத்தினன் என்பது சோழசுந்தரக்கடவுள் பொற்றாமரைக்கரையி லெழுந்தருளிக் கடைச் சங்கப்புலவர் தலைவராய நக்கீரனார் கூறிய கோபப் பிரசாதம் பெருந்தேவபாணி முதலிய செந்தமிழ் நூல்களைக் கேட்டருளியதைக் குறிக்கின்றது.
- கொங்குதேர்வாழ்க்கை பஞ்சிறைத் தும்பி காமஞ்செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீ இய நட்பின்மயிலியற் செறியெயிற்றரிவை கூந்தலி னறியவுமுளவோ நீயறியும்பூவே. - குறுந்தொகை.