பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



120 அருமறைவிதியு முலகியல்வழக்குங்க கருத்துறை பொருளும் விதிப்படநினைந்து வடதொன் மயக்கமும் வருவனபுணர்த்தி யைந்திணைவழுவா தகப்பொருளமுதினைக் குறுமுனிதேறவும் பெறுமுதற்புலவர்க ளேழெழுபெயருங் கோதறப்பருகவும் புலனெறிவழக்கில் புணருலகவர்க்கு முற்றவம் பெருக்க முதற்றாபதர்க்கு நின்றறிந்துணர்த்தவுந் தமிழ்ப்பெயர்நிறுத்தவு மெடுத்துப்பரப்பிய விமையவர்நாயகன்' என்பது ஆலவாயெம்பெருமான் “களவியல் அருளியவரலாற்றை விளக்குகின்றது. மேற்காட்டிய சரித்திரங்களை மிக்க அழகாகத் தம்நூலில் கூறிப் போந்த இவ்வாசிரியர் கடைச்சங்ககாலத்திற்குப் பிற்பட்டவராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கும். * இனி ஆலவாயெம்பெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் செய்தருளிய பின்னரே நம்மாசிரியர் இந்நூலியற்றியுள்ளாரென்பது, "எட்டெட்டியற்றியகட்டமர் சடையோன் என்னுங் கல்லாடச் செய்யுளடியால் அறியப்படும். அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது திருவிளையாடல்கள், திருஞானசம்பந்த சுவாமிகள் கூன்பாண்டியற்குச் சுரந்தீர்த்ததையும் சமணரைக் கழுவேற்றியதையும் பற்றியனவாகலின், இந்நூலுடையார், கடைச்சங்ககாலத்திற்குப் பிந்தியவராகிய திருஞானசம்பந்த சுவாமிகட்குப் பிற்பட்டவராத லுணர்ந்து கொள்க. அன்றியும், - * இந்நூலுடையார், கூடல்நாயகன் "களவியல் அருளியவரலாற்றைக் கூறுமிடங்களில், *'மாறனும் புலவரு மயங்குறுகாலை - அன்பினைந்திணையென் றறுபது சூத்திரந் - தெளிதரக்கொடுத்தனரென்றும், ஐந்திணைவழுவாதகப் பொருளமுதினைக் - குறுமுனிதேறவும் பெறுமுதற்புலவர்க - ளேழெழுபெயருங் கோதறப்பருகவும் - எடுத்துப்பரப்பி னரென்றும் உரைக்கின்றனர். அன்றியும் திருக்குறட்கு அப்பெருமான் சிறப்புக்கவியருளியதைக் குறிக்குங்கால், “வள்ளுவன் றனக்குவளர்கவிப்புலவர் முன் - முதற்கவிபாடிய 'ருளினரென்றும் கூறுகின்றனர். இவற்றால் இவ்வாசிரியர் கடைச்சங்கப்புலவருள் ஒருவரல்லரென்பது நன்குதெளியப்படும். எங்ஙனமெனில், இவர் கடைச்சங்கப்புலவர் நாற்பத்தொன்பதின்மருள் - ஒருவராயிருப்பின், 'மாறனும் புலவருடியங்குறுகாலை' யென்னாது, எம்முன்" என்றுங் கூறல்வேண்டும். இவர், அங்ஙனங் கூறாமையின், கடைச்சங்கப்புலவருள் ஒருவரல்லரென்பது இனிதுணரப்படும்.