பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



  • 121 பரிபுரக்கம்பனை விருசெவியுண்ணுங் குடக்கோச்சேரன் கிடைத்திதுகாண்கென மதிமலி புரிசைத் திருமுகங்கூறி யன்புருத்தரித்த வின் பிசைப்பாணன் பெறநிதி கொடுக்கென வுறவிடுத்தருளிய

மாதவர்வழுத்துங் கூடற்கிறைவன் என்னும் செய்யுளடிகளில் கூடல் நாயகன் தமது அன்பனாகிய பாணபத்திரர்க்குப் பொருளளிக்கும் வண்ணம் சேரமாற்கு, 'மதிமலி புரிசை மாடக்கூடல்' என்னுந் திருமுகப்பாசுரம் விடுத்தருளியதைக் கல்லாடமுடையார் கூறியிருக்கின்றனர். - சேரநாட்டில் திருவஞ்சைக்களத்திற்கருகிலுள்ள கொடுங் கோளூரிலிருந்து - ஆட்சிபுரிந்தவரும், சைவசமயாசாரியாராகிய சுந்தரமூர்த்தி - சுவாமிகட்குப் பெருநட்பினரும், அவர்களுடன் திருக்கைலாயஞ் சென்று ஆங்குச் சிவபெருமான் றிருமுன்னர்த் தாமியற்றிய திருக்கைலாய ஞானவுலாவை யரங்கேற்றியவரும், 'கழறிற்றறிவார்' என்னுந் திருநாமத்துடன் சிவனடியார் அறுபத்து மூவரில் ஒருவராக விளங்குகின்றவரும் இச்சேரர்பெருமானே யென்பது திருத்தொண்டர் புராணத்திலுள்ள கழறிற்றறிவார் புராணத்தால் நன்கறியக்கிடக்கின்றது. இனி, நடராஜப்பெருமானை நாடோறும் பூசித்து வந்த இச்சேரமான், அவ்விறைவன் திருச்சிலம்பொலியை நாளும் தஞ்செவியாரக் கேட்டுவந்தனரென்பதை, “வாசந்திருமஞ்சனம்பள்ளித்தாமஞ்சாந்தமணித்தூபந் தேசிற்பெருகுஞ்செழுந்தீபம் முதலாயினவுந்திருவமுது மீசற் கேற்றபரிசினாலருச்சித்தருள் வெந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்விலம்பினொலியளித்தார் என்னுந் திருத்தொண்டபுராணச் செய்யுளாலறியலாம். இதனை, நமது கல்லாடனாரும் 'பரிபுரக்கம்பரையிருசெவியுண்ணுங் - குடக்கோச்சேரன்' என்று தம் நூலில் மிகச்சுருக்கமாய்க் குறித்திருக்கின்றனர். ஆகவே, இச்சேரலற்குப் பிந்தியவரே நமது கல்லாடனாரென்பது இனிதுவிளங்கும். இச்சேரர் பெருமானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பெருநட்பினர் களென்றும், இருவருஞ்சேர்ந்து ஒரே காலத்தில் திருக்கைலாயஞ் சென்றவர்களென்றும் - முன்னரே கூறியுள்ளேன். இதனால், சைவசமயாசாரியராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகாலத்திற்குப் பிந்தியவரே கல்லாடமுடையாரென்பது நன்கு வெளியாதல் காண்க. பொய் யடிமையில்லாத புலவர்க்குமடியேன்" என்று கடைச்சங்கப்புலவர்கட்குத் தமது திருத்தொண்டத்தொகையில் வணக்கங்கூறிப்போந்த சுந்தர