பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



128 - போயிருந்தமையின் அவ்விடங்களில் புள்ளியிட்டுப் பதிப்பித்துள்ளனர். கல்லில்வரையப்பெற்றுள்ள இவ்வந்தாதியின் பதினைந்து பாடல்களை ஒருவாறு திருத்திப் 'பொழில்' அன்பர்கள் படித்தின்புறுமாறு ஈண்டு வெளியிட்டுள்ளேன். இவ்வந்தாதியின் இறுதியிலுள்ள கட்டளைக் கலித்துறையொன்றும் வெண்பாவொன்றும் இதனை இயற்றிய புலவரது வரலாற்றைச் சிறிது உணர்த்துகின்றன. அவை, 'மற்பந்த மார்பன் மணியன் மகன்மதின் வேம்பையர்கோன் - நற்பந்த மார்தமிழ் நாராயணனஞ் சிராமலைமேற் கற்பந்த ஜூழலில் வைத்த கலித்துறை நூறுங்கற்பார் பொற்பந்த நீழ லரன்றிருப் பாதம் பொருந்துவரே' 'மாட மதுரை மணலூர் மதிள்வேம்பை யோடமர்சே (ய்)ஞலூர் குண்டூரிந் நீடிய நற்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற் தற்பதித்தான் சொன்ன கவி' என்பனவாம். 'இவற்றால், சிராமலையந்தாதியின் ஆசிரியராகிய நாராயணன் என்பார் மணியன் என்பவரது புதல்வர் என்பதும் வேம்பத்தூரில் பிறந்தவர் என்பதும் மதுரை, மணலூர், வேம்பத்தூர், சேய்ஞலூர், குண்டூர் என்ற ஊர்களில் வாழ்ந்தவர் என்பதும் வெளியாகின்றன. இவர் பாடிய சிராமலை அந்தாதியின் ஏட்டுப் பிரதி எவ்விடத்திலேனும் உளதா என்று ஆராய்ந்துணர்த்துமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். - || - மொழிந்திடு மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின் கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான் *பொழிந்திடு மெல்லருவிச் சிராமலைப் புகுந்திடுமின் இழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே. (3) நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சநுங்கித் தெற்கும் வடக்குந் திரிந்தே வருந்திச் சிராமலைமேற் பொற்குன் றனைக்கண்டு கொண்டே வினிப்புறம் போகவொட்டேன் கற்குன் றனையநெஞ் சிற்செல்வ ராவில்லை காரியமே. (5)

  • இவ்வடி அலகிட முடியாமலிருக்கின்றது; 'சிராமலை' என்பது சிரபுரம் என்றிருப்பின் பொருந்தும்.