பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



130 பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள் சீற்றந் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள் கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த மணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி வள்ள லுக்கே (40) இழியு நரகமு மேலுந் துறக்கமு மிவ்விரண்டும் பழியும் புகழுந் தரவந் தனவினைப் பற்றறுத்துக் கழியு முடம்பு கழிந்தவர் காணுங் கழலன்கண்டீர் - பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனே. - (49) மருந்தே சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய் குருந்தேய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரே முருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின் றிருந்தே நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே. (75) பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த மெய்யினைக் காத்து வெறுத்தொழிந் தேன்வியன் பொன்மலைமேல் அய்யனைத் தேவர்தங் கோனையெம் மானையம் மான்மறிசேர் கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே. (97) ஒக்கிய கையொ டொருக்கிய வுள்ளத்து யோகியர்தம் வாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந் தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழன்மே லாக்கிய சிந்தை யடியர்க்கென் னோவின் றரியனவே. (101) அரியன சால வெளியகண் ஊரரு வித்திரள்கள் - பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக் கரியன செய்யன நுண்புகர்ப் பைங்கட் கடாக்களிற்றின் உரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளே. (102)