பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



133 கடுத்த கூத்தனூர் என்பது கூத்தருக்குக் கொடுக்கப்பெற்றது. இவர் காலிங்கராயன் அரும்பைக் கூத்தனைப் பற்றி அரும்பைத் தொள்ளாயிரம் என ஒன்று பாடியிருக்கிறார். அது கிடைத்திலது. காலிங்கராயனாகிய இவன் சயங்கொண்டார் காலத்திலிருந்து விக்கிரமனது ஆறாவதாட்சியாண்டு வரையிலும் அரசியல் வினையியற்றிப்பின்னர் ஓய்வெடுத்துக்கொண்டவன். இவன் இருவராலும் பாடப்பெற்றுள்ளான். ஆதலால் சயங்கொண்டார் காலத்தில் கூத்தருமிருந்திருப்பர் எனக் கருதலாம். கூத்தர் காலத்து விக்கிரம சோழனால் தென் கலிங்கப்போர் நடத்தப்பெற்றது. அதுபற்றி இவர் பரணி பாடியதாகவும் தெரிகிறது. விக்கிரமன் பேரன் இரண்டாம் ராசராசன் காலத்து இவரியற்றிய "தக்கயாகப்பரணியில் விக்கிரமனைப் பற்றி இவர் பாடிய தென்கலிங்கப் பரணி குறிப்பிடப் பட்டுள்ளது. அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டிய தாழிசையுட் சில இப் பரணியினைச் சேர்ந்தனவாகலாம். கூத்தர் இரண்டாம் குலோத்துங்கனைப் பிள்ளைத் தமிழுலா ஆகியவற்றால் பாராட்டியுள்ளார். விக்கிரமன் காலத்துச் செஞ்சியை யாண்ட சிற்றரசனாகிய செஞ்சியர் கோன்காடவன் என்பவன் விக்கிரமன் காலத்துச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளான். இவனைச் செஞ்சிக் கலம்பகத்தாற் போற்றியவர் புகழேந்திப் புலவர். ஆதலால் கூத்தரும் புகழேந்தியும் ஏறக்குறைய ஒரு காலத்தவராகலாம். இரண்டாம் குலோத்துங்கனுக்குப்பின் அவன் மகன் இரண்டாம் இராசராசன் பட்டத்திற்கு வந்தான். தன் தந்தையைப் போன்று தமிழார்வமுடையவனாயிருந்தான். இவன் இவனது மெய்க்கீர்த்தியில் முத்தமிழ்க்குத் தலைவனெனவும் முடிசூடு மிராச பண்டிதனெனவும் புகழப்படுகின்றான். இவனைப்பற்றிய உலாவாகிய இராச ராசனுலாவும், ஈட்டியெழுபதும் இவன் காலத்துக் கூத்தராற் பாடப்பெற்றன. வீழ்ந்த அரிசமயத்தை எடுத்தவன் இவனே. இவனைப்பற்றிய உலாவில் கண்ணியொன்றற்கு ஆயிரம் பொன் கூத்தற்களித்தான் என்பர் சங்கர சோழனுலாவுடையார். இவனுக்குப் பின் 1162ல் இரண்டாம் இராசாதிராசன் பட்டம் பெற்றான். இவன் திருவொற்றியூர்க் கோயிலுட் சென்றபொழுது வாகீச பண்டிதரென்பவர் எதிர்கொண்டழைத்தார் என்பது சாசனத்துட் காணப்படுகிறது. இவ்வாகீச பண்டிதர் என்பவரே ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்த சமய நூலையியற்றியுள்ளார். இந்நூல் சங்கச் செய்யுளின் நடையையுடையது. சிவஞான முனிவராற் பாடியத்தில் பாராட்டப்பெற்றுள்ளது. பின்னர் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்துத்தான் சேக்கிழாராற் பெரிய புராணம் பாடப்பெற்றதென்பது என் கருத்து. அது பற்றிய காரணம் பலவுள. இன்னும் இவன் காலத்திலேயே நன்னூல், வச்சணந்திமாலை, வெண்பாப்பாட்டியல், நேமிநாதம் ஆகிய இலக்கண நூல்கள் இயற்றப்பெற்றன. குமார குலோத்துங்கன் கோவையென்பது இவனைப் பற்றியதே. இவன்,