பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



136 என்பான் களப்பிரரைப் போரில் வென்று பாண்டி நாட்டைக் - கைப்பற்றினான். அக்கால - முதல் அந்நாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. அவர்கள் ஆளுகையில் தமிழ்மொழி அரசாங்க மொழியாகிச் சீரும் சிறப்பும் எய்தியது. அந்நாட்களில் பாண்டி வேந்தர்கள் தம் தலை நகராகிய மதுரையம்பதியில் இசைத்தமிழ்ச் சங்கம் ஒன்று தனியாக அமைத்துத் தமிழிசையை வளர்த்து வந்தனர் என்று தெரிகிறது. அச்செய்தியை, 'உயர்மதிற்கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழின் - துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ - இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்தெய்தியதே" என்னும் மணிவாசகப் பெருமான் திருவாக்கினாலும், 'ஆழி வடிம் பலம்ப நின்றானும் அன்றொருகால் - ஏழிசை நூற்சங்கத் திருந்தானும்” என்னும் நளவெண்பாப் பாடலாலும் தெள்ளிதின் உணர்ந்து கொள்ளலாம். அவற்றில் கூறப்பட்டுள்ள' 'ஏழிசைச் சூழல்', 'ஏழிசைச்சங்கம்' ஆகிய இரண்டும் மதுரைமாநகரில் அக்காலத்தில் நிலவிய தமிழிசைச் சங்கத்தைக் குறித்தல் அறியத்தக்கது. அன்றியும், பாண்டி மன்னன் - ஒருவன் மதுரை யம்பதியில் தான் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய அரியணைக்கு 'இசையளவு கண்டான்' எனப் பெயரிட்டிருந்தனர் என்று சோழவந்தானுக் கண்மையிலுள்ள தென்கரையில் காணப்படும் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது..' எனவே, பாண்டியர்க்கு அக்காலத்தில் இசையளவு கண்டான் என்ற பட்டம் வழங்கி வந்தமை காண்க. . - கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் சோழ நாட்டில் சீகாழிப்பதியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தப் பெருமான் தம் மூன்றாம் ஆண்டில் அருட்பாக்கள் இயற்றத் தொடங்கி, அவற்றைத் தமிழ்ப் பண்களில் பாடித் தமிழிசையைத் தமிழகம் முழுதும் பரப்பி வருவாராயினர். அவ்வடிகளோடு உடன் சென்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் அவ்வருட்பாடல்களைத் தம்யாழில் அமைத்துத் தமிழ்ப் பண்களில் பாடி வந்தனர். அந்நூற்றாண்டில் விளங்கிய திருநாவுக்கரசு அடிகளும் தம் அருட்பாக்களைத் தமிழ்ப்பண்களில் பாடித் தமிழிசையை யாண்டும் பரப்பினர். அந்நாட்களில் தொண்டை நாட்டையும், சோழ நாட்டையும் ஒருங்கே ஆட்சிபுரிந்த பல்லவ மன்னனாகிய முதல் மகேந்திர வர்மன் என்பான் இசைக்கலையில் புலமையுடையவன் ஆதலின் இசைத் தமிழைப் போற்றி வளர்த்து வந்தான். ஆகவே, தமிழ்நாடு முழுதும் தமிழிசை உயர்நிலையை எய்திற்று. மேலே குறிப்பிட்ட சைவப் 1. திருக்கோவையார், பா.20. 2. நளவெண்பா. சுயம்வர கா, பா.137. இவ் வெண்பாவின் உண்மைப் பொருளைச் செந் தமிழ் ஏழாந் தொகுதியிற் காணலாம். 3. Inscription No.130 of 1910.