பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



139 பதினான்காம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்த தமிழிசை, இவ்விருபதாம் நூற்றாண்டில் அப்பெரியோர் இருவரது பேரூக்கத்தாலும் உழைப்பாலும் புத்துயிர் பெற்று, சிற்றூர்களிலும் பேரூர்களிலும் நகரங்களிலும் ஒலித்துக்கொண்டிருப்பதைப் பலர் அறிவர். அதற்குறுதுணையாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் ஆதரவினால் தமிழிசைப் பாடல்கள் தொகுதி தொகுதியாக வெளியிடப்பெற்று வருகின்றன. எனவே, தமிழிசை தமிழ் வேந்தர் ஆட்சியில் பெற்றிருந்த உயர்நிலையை விரைவில் எய்தும் என்பது திண்ணம். எல்லோரும் இனிய தமிழிசை கேட்டின் புறுமாறு அவ்வியக்கத்ததைத் தோற்றுவித்த செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளலார்க்குத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையவர் ஆவர்; அவர்களது புகழ் ஞாயிறும் திங்களும் உள்ளவரையில் உலகில் நின்று நிலவுவதாக!