பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



143 - 31. வழுக்கி வீழினும் சோழ நாட்டிலேயுள்ள தஞ்சாவூரைப் பலர் பார்த்திருக்கலாம். அப்பெருநகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசை நிறுவிச் சிறப்புடன் ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழ மன்னர் களுக்குத் தலைநகராக விளங்கிய பெருமையுடையது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் இராசராசசோழன் எடுப்பித்த இராசராசேசுவரம் என்னும் பெருங்கோயில் அந்நகரை இக்காலத்தும் அழகுபடுத்திக்கொண்டிருப்பதைக் காணலாம். - பிற்காலத்தில் அரசாண்ட நாயக்கரும் மராட்டியரும் அந்நகரையே தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்தமை சரித்திரம் படித்தோர் அறிந்ததே. அங்கு அவர்களுடைய அரண்மனையை இன்றும் காணலாம். அதில் கல்வி கேள்விகளில் வல்ல இரண்டாம் சரபோஜி மன்னன் அமைத்த 'சரஸ்வதி மஹால்' என்ற நூல் நிலையம் ஒன்று, பல்லாயிரக்கணக்கான வடமொழி, தென்மொழி, தெலுங்கு ஏட்டுப் பிரதிகளையும் அச்சிட்ட புத்தகங்களையும் தன்னகத்துக்கொண்டு நிலவுகின்றது. அப்புத்தகசாலை எத்திசையிலுமுள்ள அறிஞர்களைத் தன்பால் இழுக்கும் இயல்பினதாகும். டாக்டர் பர்னல் என்ற பேரறிஞர் அதிலுள்ள வடமொழி ஏட்டுப் பிரதிகளுக்கு ஒரு பட்டியும், திருவையாற்றுக் கல்லூரியில் தமிழாசிரியராயிருந்த காலஞ்சென்ற எல்.உலகநாத பிள்ளை தமிழ் ஏட்டுப் பிரதிகளுக்கு ஒரு பட்டியும் தயாரித்துள்ளமை அறியத்தக்கது. இவ்வாறு பண்டைப் பெருமைகளோடு இக்காலத்தும் சிறந்து விளங்கும் அம்மாநகரின் வடபால் அதன் வட எல்லையாக வடவாறு என்ற ஆறு ஒன்று ஓடுகின்றது. அது, முற்காலத்தில் வீரசோழ வடவாறு என வழங்கி வந்தது என்று தஞ்சை இராசராசேசுவரத்துக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, அது, கி.பி. 907 முதல் 953 வரையில் தஞ்சாவூரிலிருந்து அரசாண்டவனும் வீரசோழன், வீர நாராயணன் முதலான சிறப்புப் பெயர்களையுடையவனும் ஆகிய முதற் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டதாகும். அதன் வடகரையில் கருந்திட்டைக்குடி என்னும் வைப்புத்தலமும் அதனருகில் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், தென்கரையில் தஞ்சைமாநகரின் வடமேற்குப் பகுதியாக வம்புலாஞ்சோலை* என்னும் வைணவத் திருப்பதியும் அமைந்திருத்தல் வடவாற்றின் இரு மருங்கிலும் சோலைகள் செறிந்து காண்போர் கண்களைக் கவரும் இயல்பினவாய்க் குளிர்ந்த நிழலைத்தந்து கொண்டிருக்கும். அவற்றின் இரு கரைகளிலும் இடையிடையே படித்துறைகளும் பிள்ளையார் கோயில்களும்

  • வடவாற்றின் தென்கரையிமைந்த 'வம்புலாஞ்சோலை' என்ற திருக்கோயில், பிற்காலத்தில் நாயக்கர் ஆட்சியில் வெண்ணாற்றின் தென் கரையில் இடம்பெற்றுவிட்டது.