பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



144மணம்புரியப்பெற்ற வேம்பும் - அரசும் நிலைபெற்ற மேடைகளும் உண்டு. அவ்விடங்களில் எண்ணெய் தேய்த்துக் கொள்வோரும் நீராடுவோரும் உடையுலர்த்துவோரும் உடையணிவோரும் கடவுள் வழிபாடு புரிவோரும் ஆகப் பலர் தம்தம் காரியங்களில் ஈடுபட்டிருப் பார்கள். ஆதலால் அப்பிரதேசங்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையில் ஆரவாரமுடையனவாகவே இருக்கும். அவ்வாற்றின் தென்கரை வழியாகவும் வடகரை வழியாகவும் மாலை நேரங்களில் சிலர் உடல் நலங்கருதி நெடுந்தூரம் சென்று வருவதுண்டு. இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்குமுன், இளவேனிற் காலத் தொடக்கத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் முழுமதி தோன்றித் தன் குளிர்ந்த நிலவால் உலகை மகிழ்வித்துக்கொண்டிருக்கம் வேளையில் மூவர் வடவாற்றின் - தென்கரை வழியாக மேற்கே போய்க் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் வயது முதிர்ந்தவர்; தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், மராட்டி, இந்துஸ்தானி, இந்தி ஆகிய மொழிகளில் நல்ல புலமையுடையவர்; தருக்க நூல்களையும் வேதாந்த நூல்களையும் நன்கு பயின்று சிறந்த பண்பும் சீலமும் உடையவராக அந்நாளில் விளங்கியவர்; வடமொழியிலும் , இந்தியிலுமுள்ள சிறந்த வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்; அன்றியும், தம்மை அடுத்த மாணவர்கட்குக் கைம்மாறு கருதாமல் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் தருக்க நூல்களையும் வேதாந்த நூல்களையும் முறையாகப் பாடஞ்சொல்லி வந்தவர். அப்பெரியாரது பெயர் குப்புசாமிராசு என்பது; பின்னர் அவ்வறிஞர் பிரமானந்த சுவாமிகள் என்று வழங்கப் பெற்று வந்தனர். மற்றவர் நடுத்தர வயதினர்; சிறந்த தமிழ்ப் புலமையுடையவர்; அக்காலத்தில் சென்னையிலிருந்த ஓர் ஆங்கிலக் கலாசாலையில் தமிழாசிரியாராயிருந்து புகழுடன் விளங்கியவர். -- - மூன்றாமவர் இருபத்தைந்து வயதிற்குட்பட்ட - இளம் பருவத்தினர்; மேலே குறிப்பிட்ட பிரமாநந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களும் தருக்க நூலும் முறையாகப் பயின்று புலமை எய்தியவர்; கும்பபோணம் டவுன் ஹைஸ்கூலில் கி.பி. 1899 முதல் 1932 வரையில் தமிழாசிரியராயிருந்து பாடஞ்சொல்லும் வகையில் மாணவர்கள் உளத்தைப் பிணித்து அவர்களது அன்பிற்கு உரியவராய்ப் புகழுடன் நிலவியவர். அவ்வறிஞரது பெயர் அ.பாலசுப்பிரமணிய பிள்ளை என்பது. வடவாற்றின் தென்கரை வழியாக மேற்கே சென்ற அறிஞர் மூவரும் வம்புலாஞ் சோலைவரையிற் சென்று அங்குச் சிறிதுநேரம் தங்கி உரையாடிய பின்னர் அவ்வழியே திரும்பினார்கள். அவ்வாறு திரும்பி வந்துகொண்டிருக்கும்போது தஞ்சைப் பெரியார், சென்னை