D8 பா 149 சென்றனர். அப்போது வடக்கேயுள்ள திருவேங்கட மலை அவ்விருவர்க்கும் கட்புலனாயிற்று. அச்சமயத்தில் தங்கைக்கும் தமக்கைக்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. தங்கை :- அக்கா, நாம் நாள்தோறும் வழிபட்டுவரும் தணிகாசலப் பெருமான் மக்கட்பேறு அடையுமாறு அருள் புரிந்தாரில்லை; இப்போது நம் கண்களுக்கு எதிரே தோன்றும் திருவேங்கட மலையிலுள்ள பெருமாளாவது நமக்கு அப்பேற்றை அளித்தருளினால் குழந்தைக்கு அவருடைய திருப்பெயரையே வைத்து வழங்கலாம். தமக்கை :- அருடைய திருவருளால் மகப்பேறுண்டாயின் அப்படியே செய்வோம்; யானும் அங்ஙனமே வேண்டுகின்றேன். தங்கை :- அக்கா, நாம் மறந்தும் பிற தெய்வம் தொழாத வீரசைவ மரபினர். இந்நிலையில் திருவேங்கடப் பெருமான் அருளினால் நமக்க மகப்பேறுண்டாயின் இப்போது கூறியதை நிறைவேற்ற இயலுமா என்பது பற்றி எனது உள்ளம் ஊசலாடுகின்றது. தமக்கை :- நீ அதைப்பற்றிச் சிறிதும் கவலையுறவேண்டா ; யான் அதில் உறுதியாகவே இருக்கின்றேன்; பார்த்துக்கொள்ளுகிறேன். பெருமாள்தான் நமக்க அருள்புரிதல் வேண்டும். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு தண்ணீர்க்குடங்களுடன் தம் இல்லத்திற்குப் போயினர்; இச்செய்தியைத் தம் கணவனார்க்குத் குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை; மற்றையோரும் அறியார். சில திங்களுக்குப் பிறகு இருவரும் கருவுற்றுப் பத்தாந் திங்களில் ஒரே நாளில் ஒவ்வோர் ஆண்மகனைப் பெற்றனர். கந்தப்பையர் எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினர். மெல்ல மெல்ல ஓர் ஆண்டும் கழிந்தது. புலவர் பெருந்தகையார் தம் அருமைப் புதல்வர்களுக்கு ஆண்டு நிறைவு விழா நிகழ்த்திப் பெயரும் இடவேண்டும் என்று முடிவு செய்தார்; அப்போது, புதல்வர் இருவருக்கும் சரவணன், விசாகன் என்ற பெயர்களை வைக்கவேண்டுமென்றும் தம் கருத்தினை வெளியிட்டார். அச்சமயத்தில் அவருடைய மனைவியார் இருவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ள திருமாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் தாம் வேண்டிக் கொண்ட பழைய நிகழ்ச்சியை எடுத்துரைத்துப் புதல்வர்களுக்குப் பெருமாள் பெயரை வைத்துத் தம் உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டுமென்று தம் கணவணாரைப் பணிவோடும் பரிவோடும் கேட்டுக்கொண்டனர். புலவர் பிரானும் தம் மனைவியாரின் உணர்ச்சிமிக்க வேண்டு கோளை மறுக்கவில்லை ; 'அங்கனமாயின் விசாகப் பெருமாள், சரணவப் பெருமாள் என்ற பெயர்களை நம் புதல்வர்களுக்கு இடுவோம் என்று கூறினர். அவர்களும் தம் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டு