166 பிறர்செயுந் தீங்கனைத் திணையும் பொறுத்துமேன் மேலும் மகிழ்வது மன்பே போற்றிய பிறர்வயி னுற்ற சிறப்பது கண்டங் கழுக்கறா விடுத்துச் சித்தமுட் களிப்பது மன்பே அறச்சிறி தேனு மன்புதன் பெருமை யறிந்திறு மாப்படை யாதே. அன்னியர் குணமா மன்பெனு மணங்கி னழகினை யின்னமுங் கேண்மோ தன்னியல் நடக்கை தக்கவா றன்றித் தவறுறாத் தன்மைய டனது மன்னிய வுரிமைப் பொருடனக் காக மறந்துமே வழங்கிட வறியாள் என்னன செயினு மெளிவரு கோப மில்லடிங் கொன்றுமே யெண்ணாள். (5) கலிவிருத்தம் கொடுமை யென்றெவர் கூறினுங் கேட்டுளம் நடுந டுங்குவள் நாணமுற் றஞ்சுவள் - கெடல ரும்புகழ் மெய்ம்மை கிளத்தல்கேட் டுடல மெங்கும் புளகித் துவப்பளே - (6) வந்த வெல்லாம் பொறுத்து மகிழ்வளே - நந்தல் செய்யினும் நம்புதல் விட்டிடாள் எந்த வேளையு மேல்வரு மின்பமே சிந்தை செய்குவள் தீங்கு கவனியாள் (7) அறுசீரடியாசிரியவிருத்தம் இப்படி யாவ ராலு மெய்துதற் கரிதாய் நின்ற செப்பிய பரானு கூல தெரிசன சித்த மொன்றே மெய்ப்பட நிற்கும் மேலால் விளைவதோ ருணர்வு மோர்கால் பொய்ப்படும் புலமை போகும் போய்விடு மறிவுந் தானே (8) பாலியத் தன்மை யாலே பற்றிய கழற்சி பந்து போலவு மாடி யூடே பொருந்திய பார்வை போலும்