பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



176 வார்த்துக் கொடுத்த நிலமாவது (II) இந் நகரத்துப் புறவிளாகத் தூவச் செய்யும் கோன் கேரளன் திருத்துக்கும் இந்நிலத்துக்கும் பெருநான் கெல்லை கீழெல்லை இடைக் கோ (3) ட்டில் நின்று அணைக்குப் போகிற வழிக்கும் படாபாறைக்கு: மேற்கும் தென்னெல்லை அய்யன்கோயிலுக்குஞ் சாலார் விளாகத்தில் நின்று இறங்குகிற ஆற்றுக்கும் படாபறைக்கும் வடக்கும் ஆற்றுக்கு கிழக்கும் வடவெல்லை ஆற்றுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான் கெல்லைக்குட்பட்ட (4) தூவச்செய்யும் திருத்தின பள்ளக் காலால் நீர் பாயும் நிலமுட்படக் கொடுத்த நிலம் பதின்மூன்று மாவுக்கும் ஊர்காலால் மாத்தால் எழு கல நெல்லும் காற் காசும் கடமையிறுப்பானாக இந்நகரத்துக் கோன் கேரளனுக்கு இந்நிலம் அட்டிப் பெற்றுக் காராண்மையாக நீரோடு மட் (5) டிக் கொடுத்தோம் அழகிய பாண்டியபுரத்து நகரத்தோம். கோன் கேரளனுக்கு (11) இக்கடமை கோயிலி லிட் டளந்து கொடுப்பது (11). (Travancore Archaeological Series Vol. III P.58.) இக்கல்வெட்டுக்களால் புதிய கொல்லம் அமைக்கப்பெற்ற ஆண்டு முதல் தான் கொல்லம் ஆண்டு வழங்கத் தொடங்கிற்று என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. இனி, 'செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும் தங் குறிப்பினவே திசைசொற்கிளவி' என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் தெய்வச்சிலையார் கூறியிருப்பது கொல்லத்ததைப் பற்றிய சில செய்திகளை இனிது புலப்படுத்துகின்றது. அது 'பன்னிரு நிலமாவன; - குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் கொடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேற்றினார் போலும்' :என்பதாம்(1). (1) நம் தமிழ்மொழியில் கலந்து வழங்கும் திசைச்சொற்கள் எவ்வெந்நாடுகளிலிருந்து வந்துள்ளன என்பதை விளக்கவந்த உரையாசிரியராகிய தெய்வச்சிலையார், குமரியாற்றின் தென்கரையில் கொல்லம் என்னும் நாடு முன்னர் இருந்தது என்றும், அதனைக் கடல்கொண்ட பின்னர் அவ்வாற்றிற்கு வடக்கே புதிய கொல்லத்தை அமைத்து, மக்கள் அங்குக் குடியேறினர் என்றும், நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருப்பது அரியதோர் உண்மைச் செய்தியாகும். எனவே, இப்போதுள்ள கொல்லத்தைப் புதிதாக அமைத்து மக்கள் குடியேறிய காலத்தில்தான் கொல்லம் ஆண்டும் முதலில் வழங்கத் தொடங்கிற்று என்பது உறுதியெய்துதல் காண்க. இவ்வுண்மைக் --- தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை-பக்கம். 219. .