பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 177 'கொல்லந் தோன்றி இறுநூற் றைம்பத்திரண்டாம் ஆண்டு' என்ற கல்வெட்டுத் தொடர்மொழிகள் வலியுறுத்தி நிற்றல் உணரற்பாலதாகும்.

  • கி.பி. 822 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்துவிட்டது என்றும் கி.பி. 825 ஆம் ஆண்டில் புதிய கொல்லம் அமைக்கப்பட்டது என்றும் துடிசைக்கிழார் திருவாளர் அ.சிதம்பரனார் அவர்கள் எழுதியிருப்பது ஈண்டு அறிந்து கொள்ளுதற் குரியதாகும் (1). கி. பி. எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேரமான் பெருமாள் நாயனார் கைலாய்ஞ் சென்றனர் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுதலின் (2) அக்காலத்தில் கொல்லம் ஆண்டு தொடங்கியிருத்தற்கு ஏது சிறிதும் இல்லை என்க.

6. ஒரு பழைய வழக்கம் :- இக்காலத்தில் இயற்பெயருக்கு முன்னர் மகாராஜராஜஸ்ரீ என்பதை மரியாதைக்கு அறிகுறியாகக் சேர்த்து எழுதுகின்றனர். நமது தமிழன்னைக்குத் தொண்டு புரிவதில் முன்னணியில் நிற்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் இயற்பெயருக்கு முன்னர் மரியாதைக்கு அறிகுறியாகத் திருவாளர் என்பதை முதலில் எழுதத்தொடங்கி இதனை வழக்கத்திற் கொணர்ந்தனர். இங்ஙனம் எழுதும் முறை நம் தமிழகத்தில் யாண்டும் பரவி இது போது நிலைபேறெய்தியுள்ளது. இவ்வாறு முற்காலத்திலும் எழுதிவந்தனர் என்பது ஒரு பழைய கல்வெட்டால் புலப்படுகின்றது. அஃது அடியில் வருமாறு: (1) ஸ்வஸ்திஸ்ரீ கோமாற வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடுகொண்டு அருளிய சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 2 -ஆவது தென் கோணாட்டுக் குன்று சூழ் நாட்டுச் சிகாநல்லூர் திருவாளன் சோழ மூவேந்தவேளானும் திருவுடை (2) யான் கோதண்டனும் சுந்தன் கொழுந்தும் சுந்தன் கணியும் நம்பி கொழுந்தும் நம்பி பன்மனும் பொன்னன் ஒன்றாயிரமுடையானும் இவ்வணைவோம் எங்கள் கீழைப் புன்செய் விலைக்குற விற்கக் கொள்ளிருளிரோ வென்று ஒருகாலாதும் இருகாலா(3)வதும் முக்காலாவது முற்கூறப் பிற்கூறி சோழபாண்டிய வளநாட்டு ஆற்றூருடையான் நம்பி பொன்னம்பலக் கூத்தனான உடையார் காங்கேயராயர் கொள்வேனென்று அருளிச்செய்ய முன் சொல்லப்பட்ட இவ்வனைவரோம் நாங்கள் விற்கிற பு(4)ன் செய்க்குப் பெருநான்கெல்லை யாவன கீழ்பாற் கெல்லை மேல் மணநல்லூர் ஊர்ப்பொது எல்லைக்கும் மேற்கும் தென்பாற் கெல்லை திருவாளன் சோழ மூவேந்த வேளான் செய்க்கு வடக்கும் மேற்பாற் கெல்லைசுந்தன் கொழுந்து 1. செந்தமிழ்த்தொகுதி 33 பக்கம் 63. 2. தமிழ்ப்பொழில் துணர் மூன்றில் யான் எழுதியுள்ள 'சுந்தரமூர்த்திகளது காலம்' என்ற கட்டுரையைப் பார்க்க.