பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



16 4. அதிகமான் நெடுமானஞ்சி இவன் கடைச்சங்க நாளில் தமிழகம் புகழவிளங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவனென்பது முரசுகடிப்பிகுப்பவும் என்னும் 158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப்படையில் 84 முதற் 122 வரையுள்ள அடிகளாலும் நன்கு விளங்கும். இவனை அதியமான் நெடுமானஞ்சியெனவும், நெடுமானஞ்சியெனவும், அஞ்சியெனவும், எழினியெனவும் வழங்குவர். இவ்வள்ளலைப்பற்றிய சரித்திரமுழுதும் அறியவிடமில்லையேனும் பழைய நல்லிசைப்புலவர்கள் இவன் விஷயமாகப்பாடியுள்ள செய்யுட்கள் இவன்வரலாற்றைச் சிறிது அறிதற்கு உதவியாயிருந்தலோடு இவனது பெரிய கொடைச்சிறப்பையும், மிகுந்த போர்வீரத்தையும் அரியகுணங்களையும் இக்காலத்தார்க்கு நன்கு புலப்படுத்துகின்றன. இவன் 'மழவர் என்னும் ஒருகூட்டத்தார்க்கு அரசனென்பது 'ஓங்குதிற - லொளிறிலங்கு நெடு வேன்மழவர் பெருமகன் (புறம்.88) எனவும் “வழுவில்வண்கை மழவர் பெரும (புறம்.90) எனவும் புறநாநூற்றில் வருதலாற்றெரியலாம். இவன் ஊர் தகடூரென்பதும், மலை குதிரைமலையென்பதும் 230, 158 - ம் புறப்பாடல்களால் முறையே அறியப்படுகின்றன. இவன் வெட்சிப்பூவையும் வேங்கைப்பூவையும் அணிவோன்; இவனுக்குரிய மாலை பனைமாலையாகும் (புறம்.99). புறநானூற்றுரையாசிரியர், “இவனுக்குப் பனந்தார்கூறியது சேரமாற்கு உறவாதலின் என்று 99-ம் புறப்பாட்டினுரையிற் குறித்திருப்பதனால் இவன் சேரர்களுக்கு உறவினனென்பது அறியக்கிடக்கின்றது. இவன் நகர் வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடையதென்றும், மலைக்கணங்கள் போன்ற மாளிமைகளையுடையதென்றும் கூறுவர். இதனை, ஆர்வலர்குறுகினல்லதுகாவலர் கனவினுங்குறுகாக்கடியுடைவியனகர் மலைக்கணத்தன்னமாடஞ்சிலம்ப" என்னும் அடிகளிற்காண்க. இவனது கொடையைச் சிறப்பிப்பதோர்விஷயம் புறநானூற்றில் காணப்படுகிறது. அஃதாவது:- இவ்வள்ளல் ஒருகாலத்து உண்டோர்க்கு நெடுங்காலம் ஜீவித்திருத்தலைச் செய்யும் அருமை பெருமை வாய்ந்ததோர்நெல்லிக்கனியைப் பெற்று, தானுண்டு நெடுநாள் 1 இவன் வழித்தோன்றல்களே பிற்காலங்களில் 'மழவராயன்' என்னும் பெயர் புனைந்த சிற்றரசர்களாகவும், மந்திரிகளாகவும், சோழசக்கரவர்த்திகளின்கீழ்த் தென்னாடுகளில் இருந்து வந்தனரென்று தெரிகிறது. தற்காலத்திலும் இப்பெயர் புனைந்தோர். சிலர் தஞ்சை திருச்சிமுதலிய ஜில்லாக்களில் வசிக்கின்றனர். இவர்களெல்லாம் மேலே சொல்லப்பட்ட வர்களின் வம்சத்தினர்களென்றே புராதனசரித்திர ஆராய்ச்சி செய்யும் அறிஞர் பலரும் கருதுகிறார்கள்.