பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



19 என்னும் புறப்பாட்டடிகளால் அறியலாம். இவன், நல்லிசைப்புலவராகிய ஒளவையாரை, அக்காலத்துக் கச்சியையாண்ட தொண்டைமானுழைத் தூதனுப்பியதாக 95-ம் புறப்பாட்டால் தெரிகிறது. இவன் எக்காரணம்பற்றி அங்ஙனந் தூதனுப்பினானென்று தற்காலத்து அறியக்கூடவில்லை . அத்தொண்டைமான் தன் போர்வலியின் பெருமையுணருமாறு தன்படைக்கலக்கொட்டிலைக் காட்ட ஔவையார் அவற்றைப் பார்த்து “இப்படைக் கருவிகளெல்லாம் போரிற்பயன்படாமையாற் பீலியணிந்து மாலை சூட்டிக் காம்புதிருத்தி நெய்யணிந்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணேதங்குவன: எம்முடைய அதிகன்வேல் பகைவரைக்குத்துதலான் நுனிமுரிந்துகொல்லன் பணிக்களரியிற் சிறிய கொட்டிலிடத்துற்றன என்று அத்தொண்டைமான்வீர்த்தையிகழ்ந்து தமது அதிகன்போர்வீரத்தையே மேம்படுத்துரைத்தார். தொல்காப்பியப்புறத்திணையியல் ஏழாஞ்சூத்திரத்துரையில் ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையினடங்கும்: அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதிகமானிருந்ததாம் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியிருத்தலாற் சேரமானுக்கும் அதிகமானுக்கும் தகடூரின்கண் ஒரு பெரும்போர் நடந்திருக்க வேண்டுமென்பது அறியப்படுகிறது. இனி, ஒளவையார்பாடிய “கடல்கிளர்ந்தன்ன தகடூர் நாப்பண் என்னும் 295-ம் புறப்பாட்டாலும் புறத்திரட்டிலேகாணப்படும் தகடூர்யாத்திரைப் பாடல்களாலும், தகடூரின்கண் ஒளவையார் காலத்தில் ஒரு பெரும்போர் நடந்திருக்க வேண்டுமென்பது நன்குவிளங்குகிறது. இப்போர் மேற்கூறிய சேரமானுக்கும் அதிகமானுக்குமே நடைபெற்ற தாதல்வேண்டும். இதனை நன்குவிளக்கக்கூடிய மற்றொருபிரமாணம் பதிற்றுப்பத்திற் காணப்படுகிறது. பதிற்றுப்பத்து எட்டாம்பத்தின் பதிகத்தில், இப்போர் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்கும் அதிகமானுக்கும் நடந்ததென்றும்,சேரமானே வாகை மிலைந்தனனென்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. அன்றியும், சேரமான் தகடூரின்கண் போர் செய்து அதிகமானை வென்ற விஷயம் அவன் பெயர்க்கு முன்னால் அடையாகக் கொடுக்கப்பட்டு வழங்கும் 'தகடூரெறிந்த ' என்னும் சொற்றொடரினாலும் நன்கு விளங்கிநிற்றல்காண்க. இப்போரில் அருங்குணமும் பெருங்கொடையும் வாய்ந்த அதிகமான் உயிர் துறந்திருக்க வேண்டுமென்பது 295-ம் புறப்பாட்டால் அறியப்படுகிறது. இவன் இறந்ததையறிந்த நல்லிசைப் புலவராய ஒளவையார் பெரிதும்மனமிரங்கி, “அவனையின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனியில்லையாகுக : யான் உயிர்வாழுநாளும் எனக்கு ஓர்பயன் ALTo