பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 39 தற்காலத்தே நமது இந்தியப்படைஞரில் சீக்கியரும் கூர்க்கரும் சிறந்த வீரராயிருத்தல் போல இம்மழவர் குடியினர் பண்டைக்காலத்திய போர்வீரர்களில் சிறந்து விளங்கியவராவர். இன்னோர் இத்தகைய சிறந்த வீரராயிருந்தமையின் நெடுமுடிவேந்தர்களாய சேர பாண்டிய சோழர் இவர்களைப் போர்த்துணை கொண்டிருந்தனர். குவியற்கண்ணி மழவர் மெய்ம்ம றை" (15) வாலூன் வல்சி மழவர் மெய்ம்ம றை " (16) எனவரும் பதிற்றுப்பத்தால் இமய வரம்பன்றம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனும் (17) ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் (18) மழவர்களைப் படைத்துணைகொண்ட செய்தி நன்கறியப்பெறும். இனி இவர்களுள் பெரும்பகுதியார் குதிரைப்டைஞராகவும் யானை வீரராகவும் இருந்துள்ளனரென்பது உருவக் குதிரை மழவரோட்டிய' (19) எனவும், 'மைபடு நெடுந்தோன் மழவரோட்டியிடைப்புலத் தொழிந்த வேந்து கோட்டியானை (20) எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல்களால் இனிது புலப்படும். அன்றியும் இன்னோர் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பது 'ஒன்சிலை மழவர்' (21) கல்லா மழவர் வில்லிடந் தழீஇ' (22) என்பவற்றால் அறியப்பெறும். இனி மழவர் முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப்பெய்த கமழ்நறும்பூவினர் (23) என்ற மதுரைக் காஞ்சியடிகள் இன்னோர் ஒருவகைப் போர்ப்பறைக் கொட்டிச் செல்லும் வழக்கமுடையரென்பதைத் தெரிவிக்கின்றன. இவர்கள் ஆற்பூந்தொடை விழவு (24) மிகச்சிறப்புடையதென்பது 187-ஆம் அகப்பட்டால் தெரிகின்றது. இனிப் 'பூந்தலைமழவர்' 25 என்னும் மதுரைக் காஞ்சியானும் “குறியற்கண்ணி மழவர் (26) என்னும் பதிற்றுப்பத்தானும் இவர்கள் தங்கட்கு அடையாளமாகப் போர்ப்பூவும், தார்ப்பூவும் சூடிக்கொள்ளுதல் பெறப்படுகின்றது. “தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபுசுரிந்த - சுவனமாய்ப் பித்தைச் செங்கண்மழவர் (27) என்று இன்னோரது தலைமயிர் சிறப்பிக்கப்பெற்றுள்ளது. உண்ணற்குரிய உணவுகளாக இவர்கள் கைக்கொண்டவை உருசியுள்ள திண்பண்டங்களும் வீரர்கட்குரிய வேறுவித உணவுமேயாமென்பது 'தீம்புழல் வல்சிக் கழற்கான் மறவர் (28) செவ்வூன்றோன்றா வெண்டுவை முதிரை- வாலூண்வல்சி மழவர் (29) என்பவற்றால் நன்குணரப்படுகின்றது. இங்ஙனம் போர்வீரத்திற்கும் படைவன்மைக்கும் பேர்பெற்றவர் களாக விளங்கிய மழவர் மிகச்சிறப்புற்று உயர்நிலையிலிருந்தது மதுரைமா நகரின்கண் கடைச்சங்கம் நின்று நிலவிய காலமேயாம். எனவே, இவர்கள் சிறந்து வாழ்ந்தமை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயாமெனக் கொள்க. கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பல்லவ