74 - தன்னகத்துக்கொண்டு விளங்கிற்று. வளநாட்த்ை தற்காலத்திலுள்ள ஜில்லாவுக்கும் நாட்டைத்தாலுக்காவிற்கும் ஒப்பாகக் கூறுதல் பொருந்தும். வளநாட்டின் உட்பகுதிகளுள் சிலவற்றைக் கூற்றங்கள் என்று வழங்குவதும் உண்டு. மேலே குறித்துள்ள ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் இராஜராஜ சோழனது இயற்பெயரும் புனைபெயர்களுமேயாம். பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பேயாகும். மேலே வரைந்துள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்ற நித்த விநோத வளநாடு என்பது தஞ்சாவூர் தாலுகாவின் கீழ்ப்பகுதியும் பாவநாசந் தாலுகாவின் மேற்பகுதியும் மன்னார்குடித் தாலுகாவின் வடபகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும். ஆவூர் கூற்றம், கிழார்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், நல்லூர் நாடு, கரம்பைநாடு, முடிச்சோணாடு என்பவை நித்த விநோத வளநாட்டின் உட்பகுதிகளாகவுள்ள சிலநாடுகள் ஆகும். இனி ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலுகாவிலுள்ளதும் சைவசமயாசாரியார்களால் பாடப்பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சுரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக்கொண்டு விளங்குவதுமாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகக் கொண்டு இதனைச் சூழ்ந்திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. எனவே, தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலுகா ஆவூரில் வாழ்ந்த தலைவனும் முதல் இராஜராஜசோழனது பணிமகனுமாகிய கண்ணன் ஆரூரன் என்பவனே செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசனாகிய இராஜராஜன் பெயரால் கிணறு தோண்டுவித்துத் தண்ணீர் இறைப்பார்க்கு நிபந்தம் விட்டவன் என்றுணர்க. இக்கல்வெட்டில் காணப்படும் அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க முத்திரையிடப்பெற்ற மரக்கால் ஆகும். அருமொழி தேவன் என்பது முதல் இராஜராஜனுக்குரிய பெயர்களுள் ஒன்றாம். இவ்வேந்தன் காலத்திலிருந்த அரசாங்க மரக்காலுக்கு “இராச கேசரி என்ற பெயர் வழங்கிற்று என்றும் இம்மன்னர் பெருமானால் எடுப்பிக்கப்பெற்ற தஞ்சை இராசராசேச்சுரம் திருக்கோயிலிலிருந்த மரக்காலுக்கு ஆடவல்லான் என்ற பெயர் வழங்கிற்று என்றும் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றன. இங்குக் குறிக்கப்பெற்ற அருமொழிதேவன், இராசகேசரி, ஆடவல்லான் என்ற மூன்று மரக்கால்களும் ஒரே அளவுள்ளவை என்பது ஈன்டு உணர்தற்குரியது. நாள்தோறும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பவனுக்கு