பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



75 நாள் ஒன்றுக்குக் கூலி இரண்டு' மரக்கால் நெல்லும் கொடுக்கப்பட்டு வந்தது என்பது இக்கல்வெட்டால் புலப்படுகிறது. அன்றியும், திங்கள் தோறும் மட்பாண்டங்கள் இடுவோனுக்குத் திங்கள் ஒன்றுக்கு எட்டு மரக்கால் நெல் கூலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் நேருமாயின் அவற்றைப் புதுக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு இரு கலனே எட்டு மரக்கால் நெல் நிபந்தமாக வைக்கப்பட்டுள்ளது. இனி, இக்கல்வெட்டில் காணப்படும் பெருவழி (Road) பணிமகன் (Servant) புதுக்குப்புறம் (Cost for repairing) என்ற செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந் தன்மை யனவாயிருக்கின்றன.. 'மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப் பெண்ணுப் பெருந்தகையாள் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா வுடம்பெய்தி னார். -