பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



86 - இனி, சேக்கிழாரடிகள் குறும்பநாயனாரது திருப்பதி பெருமிழலை என்றன்றோ உரைத்துள்ளனரெனின், கூறுவாம் பாபநாசம் தாலுக்காவிலுள்ள மிலட்டூர் முற்காலத்தில் பெருமிலட்டூர் என்று வழங்கிற்று என்பது ‘நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பெருமிலட்டூர் ஊரார் யாண்டு இருபத்தொன்பதாவது முதல் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் முக்குறுணி நெல்லுப் போலிசையாகத் தஞ்சாவூர் ஸ்ரீராஜராஜேஸ்ரம் உடையார் பெரும் பண்டாரத்தேய் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கக் கடவர்களாகக் கொண்ட காசு இருநூறினால் ஆண்டாண்டுதொறும் அளக்கக் கடவநெல்லு ஐம்பதின் கலம் (S.1.1.Vol II.No.6) என்னும் கல்வெட்டினால் புலப்படுகின்றது. இதனைப் போலவே, தஞ்சாவூர்த் தாலுக்காவிலுள்ள ஆற்காடு என்னும் ஊர் பழைய நாளில் பேராற்காடு என்வும் சீநக்க வள்ளலுக்குரிய ஊர்களுள், ஒன்றாகிய அரசூர் பேரரசூர் எனவும் வழங்கிவந்தன என்று தெரிகின்றது. (South Indian Inscriptions. Vol II Introduction Page 26.) எனவே , பெருமிலட்டூர், பேராற்காடு, பேரரசூர் என்று முற்காலத்தில் வழங்கிய ஊர்கள் முறையே மிலட்டூர், ஆற்காடு; அரசூர் என்று தற்காலத்தில் வழங்குவதுபோல, நமது குறும்பநாயனாரது திருப்பதியாகிய பெருமிழலையும் இஞ்ஞான்று மிழலை என வழங்குகின்றது என்றுணர்க. குறிப்பு : இஃது செந்தமிழ்த் தொகுதி 21 பகுதி 10-இல் வெளிவந்த கட்டுரையின் திருந்திய வடிவமாகும்.