பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



88 திருவாய் மலர்ந்தருளிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் உள்ள, "இடைமரு தீங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேரூர் சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணலாமே" என்னும் திருப்பாடலில் ஏர் என்ற திருப்பதியொன்று கூறப்பட்டுள்ளது. அன்றியும், அவ்வடிகள் அருளிய திருவீழிமிழலைத் திருத் தாண்டகத்திலுள்ள, பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழிய்யார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார் இரும்புதலார் இரும்பூளையுள்ளார் ஏரார் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன்சொற் கரும்பனையான் இமையோடும் கருகாவூரார் - கருப்பறியலூரார் கரவீரத்தார் விருப்பமரர் இரவுபகல் பரவியேத்த வீழிமிழலையே மேனினாரே" என்ற திருப்பாடலிலும் ஏர் என்னும் திருப்பதி குறிக்கப்பெற்றிருத்தல் அறியத்தக்கதாகும். வாகீசப்பெருமானது திருவாக்கிற் பயின்றுள்ள அத்திருப்பதிக்கு அவ்வடிகள் திருவாய் மலர்ந்தருளிய தனிப்பதிகம் இதுபோது காணப்படவில்லை. அன்றியும், திருஞானசம்பந்த சுவாமிகளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிய பதிகங்களும் அத்திருப்பதிக்கு இல்லை . சமயகுரவர்களாகிய இப்பெரியோர்கள் மூவரும் அருளிய தேவாரப்பதிகங்களுள் பல இறந்து போயின என்று சொல்லக் கேட்கிறோம். அங்ஙனம் இறந்து போன பதிகங்களுள் ஏர் என்னும் திருப்பதிக்குரிய பதிகங்களும் இருத்தல் கூடும் என்பது திண்ணம். ஆயினும், திருநாவுக்கரையரது திருவீழிமிழலைத் திருப்பதிகத்திலும் க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்திலும் அத்திருப்பதி கூறப்பட்டிருத்தலின் அது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகும் என்பது